கேரளாவை சேர்ந்த 22 வயதான அதிலா நஸ்ரினும், 23 வயதான பாத்திமா நூராவும் பள்ளி நாட்களில் இருந்தே பழகி வந்துள்ளனர். அவர்களின் நட்பு, கல்லூரி காலத்திலும் தொடர்ந்துள்ளது. கல்லூரி படிப்பு முடிந்ததும் பிரிய மனமில்லாமல் இருவரும் தம்பதியினர் போல் ஒன்றாக வாழ முடிவு செய்து வீட்டை விட்டு வெளியேறி உள்ளனர். பிறகு தனியாக வீடு எடுத்து இருவரும் வாழ்ந்து வந்துள்ளனர்.
இதற்கு இரு குடும்பத்தினரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். பாத்திமாவை அவரது குடும்பத்திவர் கட்டாயப்படுத்தி வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளனர். இதனையடுத்து அதிலா உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுதாக்கல் செய்தார். அதில், தானும் தனது மனைவியான பாத்திமா நூராவும் குடும்த்தினரால் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் துன்புறுத்தப்படுவதாக குறிப்பிட்டிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த கேரள உயர்நீதிமன்ற நீதிபதி வினோத் சந்திரன், விசாரணையின் முடிவில், லெஸ்பியன் ஜோடி ஒன்றாக சேர்ந்து வாழ்வதற்கு தடையில்லை என்று உத்தரவிட்டார். பாத்திமாவை, அதிலாவுடன் சேர்ந்து வாழ அனுமதி அளித்துள்ளார்.