Article2026-ல் வெளியாகும் ஆப்பிள் கார் - விலையும் வெளியானது.

2026-ல் வெளியாகும் ஆப்பிள் கார் – விலையும் வெளியானது.

-

ஆப்பிள் தனது ‘ஆப்பிள் கார்’ என குறிப்பிடப்படும் மின்சார வாகனத்தை 2026-ஆம் ஆண்டு வரை தாமதப்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது, மேலும் இதன் விலை $1,00,000-க்குள் (ரூ. 80 லட்சத்திற்குள்) இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆப்பிள் நிறுவனம், ஆதன் self-driving மின்சார வாகனத்திற்கான அதன் பார்வையை குறைத்துள்ளதாக கூறப்படுகிறது. ஏனெனில், ‘டைட்டன்’ என அழைக்கப்படும் இந்த வாகனத்தின் திட்டம் கடந்த சில மாதங்களாக இழுபறியில் இருந்ததாகத் தெரிகிறது.

தொடக்கத்தில், ஐபோன் நிறுவனம் ஸ்டீயரிங் அல்லது பெடல்கள் இல்லாத ஒரு காரை உருவாக்க திட்டமிட்டது, இதில் பயணிகள் ஒரு limousine-style-ல் ஒருவரையொருவர் எதிரெதிரே பார்க்கும் வகையில் அமரலாம் என கூறப்பட்டது.

ஆனால், இத்திட்டம் இப்போது நோக்கம் குறைக்கப்பட்டுள்ளது என்றும், இதில் ஓட்டுநர் இருக்கை, ஸ்டீயரிங் மற்றும் பெடல்களுடன் மிகவும் பாரம்பரிய வடிவமைப்பைக் கொண்டிருக்கும் என்று கூறப்படுகிறது.

இந்த காரில் fully autonomous driving அல்லது self-driving அம்சம் இருக்காது, ஆனால் நெடுஞ்சாலைகளில் தானாகவே ஓட்ட முடியும் என்று கூறப்படுகிறது.

சாலையில் வாகனம் ஓட்டும்போது பயனர்கள் கேம்களை விளையாடுவதற்கு அல்லது வீடியோக்களைப் பார்ப்பதற்கு போதுமான அளவிற்கு சுயமாக இயங்கும், ஆனால் அதிக ட்ராபிக் அல்லது மோசமான வானிலையின் போது அவ்வாறு இயங்காது என கூறப்படுகிறது

இந்த வாகனத்திற்கான வசதிகள் மற்றும் தொழில்நுட்பங்கள் மீண்டும் குறைக்கப்பட்டுள்ளதால், ஆப்பிள் காரின் விலை முதலில் எதிர்பார்க்கப்பட்ட $120,000க்கு பதிலாக $100,000க்குக் கீழ் இருக்கும் என கூறப்படுகிறது.

வாகனத்தின் வடிவமைப்பு இன்னும் நிறுவனத்தால் வேலை செய்யப்பட்டு வருகிறது, ஆனால் அடுத்த ஆண்டு இறுதிக்குள் அது முடிக்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதைத் தொடர்ந்து, காருக்கான அம்சங்களின் பட்டியல் 2024-ஆம் ஆண்டளவில் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, மேலும் 2026-ஆம் ஆண்டின் வெளியீட்டிற்கு முன்னதாக 2025-ஆம் ஆண்டில் சோதனை தொடங்கும்.

Latest news

Pay Calculator தகவலில் புதிய சட்ட மாற்றம்

Pay Calculator-இல் வழங்கப்பட்ட தகவல்களைப் புதுப்பிக்கவும் Fair Work Ombudsman நடவடிக்கை எடுத்துள்ளது. இது குறைந்தபட்ச ஊதியங்கள், சலுகைகள் மற்றும் கூடுதல் நேர விண்ணப்ப உரிமைகள் போன்ற...

உலோகத் துண்டுகளைக் கொண்ட உணவுப் பொட்டலங்கள் பற்றி எச்சரிக்கை

ஆஸ்திரேலியா முழுவதும் உள்ள Costco கடைகளில் விற்கப்படும் Golden Island Pork Jerky (Korean BBQ Recipe) 410g பொட்டலங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. உணவு தரநிலைகள் ஆஸ்திரேலியா நியூசிலாந்து,...

AI இன் உதவியை நாடும் மெல்பேர்ண் காவல்துறை

மெல்பேர்ண் நகரில் குற்றங்களைக் கட்டுப்படுத்தவும் கண்காணிக்கவும் புதிய தொழில்நுட்ப நடவடிக்கைகளை எடுக்க காவல்துறை தயாராகி வருகிறது . மெல்பேர்ண் நகரில் தற்போது 24 மணி நேர கேமரா...

விக்டோரியர்களின் விமர்சனத்தால் BOM புதிய வலைத்தளத்தை மூடுமா?

பொதுமக்களின் விமர்சனங்கள் இருந்தபோதிலும், புதிய வலைத்தளத்தை தொடர்ந்து இயக்கும் என்று ஆஸ்திரேலிய வானிலை ஆய்வு மையம் (BOM) கூறுகிறது. புதிய வலைத்தளம் $4 மில்லியன் திட்டமாகும். அணுகல்...

உலோகத் துண்டுகளைக் கொண்ட உணவுப் பொட்டலங்கள் பற்றி எச்சரிக்கை

ஆஸ்திரேலியா முழுவதும் உள்ள Costco கடைகளில் விற்கப்படும் Golden Island Pork Jerky (Korean BBQ Recipe) 410g பொட்டலங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. உணவு தரநிலைகள் ஆஸ்திரேலியா நியூசிலாந்து,...

குயின்ஸ்லாந்து பள்ளி மாணவர்களுக்கு தவறாக கற்பிக்கப்பட்ட பண்டைய வரலாறு

குயின்ஸ்லாந்தில் பண்டைய வரலாற்றுத் தேர்வு பேரழிவால் 9 பள்ளிகளும் 140க்கும் மேற்பட்ட மாணவர்களும் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பிரிஸ்பேர்ண் மாநில உயர்நிலைப் பள்ளியில் பண்டைய வரலாற்றைப் படிக்கும்...