Newsசுவிட்ஸர்லாந்தில் இந்த மாதம் அமுலுக்கு வரும் நடைமுறைகள்

சுவிட்ஸர்லாந்தில் இந்த மாதம் அமுலுக்கு வரும் நடைமுறைகள்

-

சுவிட்ஸர்லாந்தில் இந்த மாதம், சிலருக்கு நல்ல செய்திகளையும் சிலருக்கு ஏமாற்றங்களையும் அளிக்க இருக்கிறது.

அவ்வகையில், 2022ஆம் ஆண்டு, மே மாதத்தில் சுவிட்சர்லாந்தில் நிகழவிருக்கும் சில முக்கிய மாற்றங்கள் குறித்து பார்க்கலாம்.

தீவிரவாதத்துக்கு எதிராக பொலிசாருக்கு அளிக்கப்பட்டுள்ள அதிகாரம் நீட்டிக்கப்படுகிறது. அதன்படி அவர்கள், தீவிரவாத தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, மின்னணு கண்காணிப்பு மற்றும் வீட்டுச்சிறை போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம்.

மார்ச் 21 முதல் உக்ரைன் அகதிகள் சுவிட்சர்லாந்தில் பொதுப்போக்குவரத்தை இலவசமாக பயன்படுத்தி வருகிறார்கள். அந்த சலுகை, ஜூன் மாதம் 1ஆம் திகதியுடன் முடிவுக்கு வருகிறது.

இனி வெளிநாடு செல்பவர்கள், தங்களுக்கு இரண்டாவது டோஸ் கோவிட் தடுப்பூசி பெற்றுக்கொள்ளவேண்டுமானால், அதற்கான செலவை தாங்களே ஏற்றுக்கொள்ளவேண்டும் என பெடரல் பொது சுகாதாரத்துறை அற்வித்துள்ளது.

ஜூன் 21 வட பகுதிகளில் கோடையின் துவக்க நாளாக குறிக்கப்பட்டுள்ளது.

இந்தக் கோடை, வழக்கத்தை விட அதிக வெப்பம் கொண்டதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக வானிலை ஆராய்ச்சிமையம் தெரிவித்துள்ளது.

ஜேர்மனி, ஆஸ்திரியா, பிரான்ஸ், இத்தாலி மற்றும் Liechtenstein ஆகிய நாடுகளிலிருந்து சுவிட்சர்லாந்துக்கு பணிக்கு வருவோர், வீட்டிலிருந்தவண்ணம் பணி செய்தல் முதலான விதிகள் ஜூன் 30உடன் முடிவுக்கு வருகின்றன.

Latest news

இன்று முதல் விக்டோரியா வானிலையில் ஏற்படப்போகும் பெரிய மாற்றம்

அவுஸ்திரேலியாவின் தென்கிழக்கு பிராந்தியத்தில் வெப்பநிலை குறைய ஆரம்பித்துள்ளதாகவும், நாட்டின் பல பகுதிகளில் நேற்று பதிவான அதிக வெப்பநிலை படிப்படியாக குறைவடையும் எனவும் வானிலை ஆய்வு மையம்...

சீனாவின் 15 நாள் இலவச விசா கொள்கையில் சேர்க்கப்பட்டுள்ள ஆஸ்திரேலியா

சீனாவால் நடைமுறைப்படுத்தப்பட்ட ஒருதலைப்பட்சமான 15 நாள் இலவச விசாக் கொள்கையில் உள்ள நாடுகளில் ஆஸ்திரேலியாவும் சேர்க்கப்பட்டுள்ளது. கடந்த வருடம் டிசம்பர் மாதம் முதலாம் திகதி முதல் நடைமுறைப்படுத்தப்பட்ட...

10 மாதங்களில் ஆஸ்திரேலியாவிலிருந்து மற்ற நாடுகளுக்கு 200,000 டன் ஆட்டுக்குட்டி ஏற்றுமதி

ஆஸ்திரேலியா இந்த ஆண்டின் முதல் 10 மாதங்களில் சுமார் 200,000 டன் ஆட்டுக்குட்டிகளை மற்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்துள்ளது. ஆட்டு இறைச்சி ஏற்றுமதியில் 2024ம் ஆண்டு சாதனை...

60% க்கும் கீழே குறைந்துள்ள Auction clearance Rate

கடந்த 8 மாதங்களில், மெல்பேர்ணின் ரியல் எஸ்டேட் சந்தையில் ஏல அனுமதி விகிதம் 60% க்கும் கீழே சரிந்துள்ளது. இத்தகைய பின்னணியில், அக்டோபரில் ஏல அனுமதி விகிதம்...

60% க்கும் கீழே குறைந்துள்ள Auction clearance Rate

கடந்த 8 மாதங்களில், மெல்பேர்ணின் ரியல் எஸ்டேட் சந்தையில் ஏல அனுமதி விகிதம் 60% க்கும் கீழே சரிந்துள்ளது. இத்தகைய பின்னணியில், அக்டோபரில் ஏல அனுமதி விகிதம்...

உலகின் 10 சிறந்த நகரங்களில் ஒன்றாக ஆஸ்திரேலியாவில் உள்ள ஒரு நகரம்

டைம் அவுட் இதழால் வெளியிடப்பட்ட உலகின் 10 சிறந்த நகரங்களில் ஆஸ்திரேலியாவின் ஒரு நகரமும் சேர்க்கப்பட்டுள்ளது. கனேடிய சுற்றுலா மற்றும் ரியல் எஸ்டேட் சந்தை ஆலோசனை நிறுவனமான...