Newsகடைசி ஆசையை நிறைவேற்றி பீலேவின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது!

கடைசி ஆசையை நிறைவேற்றி பீலேவின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது!

-

உதைபந்து உலகின் சரித்திர நாயகனும், மூன்று முறை உலகக்கிண்ணத்தை கையில் ஏந்திய ஒரே வீரருமான பிரேசிலின் பீலே (82) புற்றுநோய் பாதிப்பால் கடந்த 29ஆம் திகதி மரணம் அடைந்தார். அவரது உடல் சாவ் பாலோ மாகாணத்தில் உள்ள சான்டோசில் உள்ள விலா பெல்மிரோ மைதானத்தில் நேற்று முன்தினம் காலை பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.

மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர். பிரேசில் ஜனாதிபதி லுலா டா சில்வா தனது மனைவியுடன் சென்று அஞ்சலி செலுத்தினார்.

அஞ்சலி நிகழ்ச்சிக்கு பிறகு பீலேவின் உடல் தீயணைப்பு வாகனத்தில் ஊர்வலமாக சென்டோஸ் வீதிகளில் எடுத்துச் செல்லப்பட்டது. சாலையின் இரு புறமும் நின்றிருந்த ரசிகர்கள் கண்ணீர் மல்க தங்களது உதைபந்து மன்னனுக்கு விடையளித்தனர். அஞ்சலி மற்றும் இறுதி ஊர்வலத்தில் 2 இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் பங்கேற்றனர்.

14 அடுக்கு மாடிகளைக் கொண்ட நெக்ரோபோல் எகுமெனிகா நினைவு கல்லறை தோட்டத்தை அவரது உடல் சென்றடைந்தது. இது தான் உலகிலேயே மிக உயரமான கல்லறை தோட்டமாகும். அங்கு அவரது குடும்பத்தினர் இறுதிச்சடங்குகளை செய்தனர். அதைத் தொடர்ந்து 9-வது மாடியில் பீலே என்ற பெயர் பொறிக்கப்பட்ட பெட்டகத்தில் அவரது பதப்படுத்தப்பட்ட உடல் வைக்கப்பட்டது.

தனது மறைவுக்கு பிறகு ஸ்டேடியத்தை நோக்கியே தனது உடலை அடக்கம் செய்யவேண்டும் என பீலே கூறியிருந்தாராம். அவரது கடைசி ஆசையை நிறைவேற்றும் வகையில் அவரது உடல் இந்த இடத்தில் அடக்கம் செய்யப்பட்டதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர்.

நன்றி தமிழன்

Latest news

பட்டப்பகலில் மருத்துவமனைக்குள் நடந்த கொடூரம் – பலர் படுகாயம்

சீனாவின் Zhenxiong மாவட்டத்தில் மருத்துவமனை ஒன்றில் நுழைந்து நபர் ஒருவரின் கொலைவெறித் தாக்குதல் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தொடர்புடைய தாக்குதலில் இருவர் கொல்லப்பட்டுள்ளதுடன் மருத்துவர்கள் உட்பட 23...

ஒரே மாதிரியான 4 பிள்ளைகளை பிரசவித்த அமெரிக்கப் பெண்

அமெரிக்காவில் பெண்ணொருவர் அரிதான ஒரே மாதிரியான 4 பிள்ளைகளை பெற்றெடுத்த நிகழ்வு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. டெக்ஸாசை சேர்ந்த தம்பதி ஜோனதன் (37), மெர்சிடிஸ் சந்து (34). இவர்களுக்கு...

உக்ரைன்-ரஷ்யா போர் முனைக்கு சென்ற இலங்கையின் முன்னாள் ராணுவ வீரர்கள் – அம்பலமானது மோசடி

உக்ரைன் மற்றும் ரஷ்யாவின் போர் முனைகளுக்கு இலங்கையின் முன்னாள் இராணுவ வீரர்களை அனுப்பும் மோசடி தொடர்பில் பாதுகாப்பு அமைச்சு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. ரஷ்யா மற்றும் உக்ரைனில் உள்ள...

பால்டிமோர் பாலத்தின் இடிபாடுகளில் இருந்து மீட்கப்பட்ட மற்றொரு சடலம்

அமெரிக்காவின் பால்டிமோர் பாலம் இடிந்து விழுந்ததில் உயிரிழந்த மற்றுமொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மீட்புக் குழுக்களால் மீட்கப்பட்ட உடல் மார்ச் 26 அன்று பால்டிமோர்...

ஸ்மார்ட்போன்அடிமைத்தனத்தின்படி நாடுகளின் தரவரிசையில் இடம்பிடித்துள்ள ஆஸ்திரேலியா

ஸ்மார்ட்போன் அடிமைத்தனத்தின்படி நாடுகளின் தரவரிசையை உள்ளடக்கிய சமீபத்திய அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, ஸ்மார்ட்போன்களுக்கு அதிகம் அடிமையான நாடுகளில் சீனா முதலிடத்தைப் பிடித்துள்ளதுடன், அந்த எண்ணிக்கை 36.8 சதவீதமாக...

NSW இல் 18 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு கத்திகளை விற்க தடை

நியூ சவுத் வேல்ஸில் கத்திகளை விற்பனை செய்வதற்கான வயது வரம்பை நிர்ணயிக்கும் புதிய சட்டத்திற்கான முன்மொழிவுகள் செய்யப்பட்டுள்ளன. கடந்த காலங்களில் அவுஸ்திரேலியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து கத்திக்குத்து...