News கடைசி ஆசையை நிறைவேற்றி பீலேவின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது!

கடைசி ஆசையை நிறைவேற்றி பீலேவின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது!

-

உதைபந்து உலகின் சரித்திர நாயகனும், மூன்று முறை உலகக்கிண்ணத்தை கையில் ஏந்திய ஒரே வீரருமான பிரேசிலின் பீலே (82) புற்றுநோய் பாதிப்பால் கடந்த 29ஆம் திகதி மரணம் அடைந்தார். அவரது உடல் சாவ் பாலோ மாகாணத்தில் உள்ள சான்டோசில் உள்ள விலா பெல்மிரோ மைதானத்தில் நேற்று முன்தினம் காலை பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.

மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர். பிரேசில் ஜனாதிபதி லுலா டா சில்வா தனது மனைவியுடன் சென்று அஞ்சலி செலுத்தினார்.

அஞ்சலி நிகழ்ச்சிக்கு பிறகு பீலேவின் உடல் தீயணைப்பு வாகனத்தில் ஊர்வலமாக சென்டோஸ் வீதிகளில் எடுத்துச் செல்லப்பட்டது. சாலையின் இரு புறமும் நின்றிருந்த ரசிகர்கள் கண்ணீர் மல்க தங்களது உதைபந்து மன்னனுக்கு விடையளித்தனர். அஞ்சலி மற்றும் இறுதி ஊர்வலத்தில் 2 இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் பங்கேற்றனர்.

14 அடுக்கு மாடிகளைக் கொண்ட நெக்ரோபோல் எகுமெனிகா நினைவு கல்லறை தோட்டத்தை அவரது உடல் சென்றடைந்தது. இது தான் உலகிலேயே மிக உயரமான கல்லறை தோட்டமாகும். அங்கு அவரது குடும்பத்தினர் இறுதிச்சடங்குகளை செய்தனர். அதைத் தொடர்ந்து 9-வது மாடியில் பீலே என்ற பெயர் பொறிக்கப்பட்ட பெட்டகத்தில் அவரது பதப்படுத்தப்பட்ட உடல் வைக்கப்பட்டது.

தனது மறைவுக்கு பிறகு ஸ்டேடியத்தை நோக்கியே தனது உடலை அடக்கம் செய்யவேண்டும் என பீலே கூறியிருந்தாராம். அவரது கடைசி ஆசையை நிறைவேற்றும் வகையில் அவரது உடல் இந்த இடத்தில் அடக்கம் செய்யப்பட்டதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர்.

நன்றி தமிழன்

Latest news

நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்ற பொங்கல் விழா!

இனிய பொங்கல்! இந்த வாரம் நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்ற பொங்கல் விழாவில் பங்கேற்றது பெருமையாக இருந்தது.எனது சகாக்களான சாலி...

குயின்ஸ்லாந்து கட்டிட விதிமுறைகளை ஒதுக்கி வைக்க கோரிக்கை!

கட்டுமானத் தொழில் தொடர்பான புதிய விதிமுறைகளை விதிப்பதைத் தவிர்க்குமாறு குயின்ஸ்லாந்து மாநிலத்தில் கட்டுமானத் தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பணியாளர்கள்...

மூன்றாம் சார்லஸ் மன்னரின் முத்திரைகள் விற்பனைக்கு!

மூன்றாம் சார்லஸ் மன்னரின் உருவம் கொண்ட தபால் தலைகள் பிரித்தானிய தபால் துறையால் வெளியிடப்பட்டுள்ளன. வரும் ஏப்ரல் மாதம்...

துருக்கி நிலநடுக்கத்தில் 4 ஆஸ்திரேலியர்கள் இன்னும் காணவில்லை!

துருக்கிய நிலநடுக்கத்தில் 04 அவுஸ்திரேலியர்கள் காணாமல் போயுள்ளதாக வெளிவிவகார திணைக்களம் தெரிவித்துள்ளது. அவர்களைப் பற்றிய தகவல்கள் காத்திருக்கின்றன என்று...

பிரபல காற்பந்து வீரர் மாயம் – துருக்கி நிலநடுக்கம்!

துருக்கியின் தென்கிழக்கு பகுதியில் சிரியாவின் எல்லையையொட்டி அமைந்துள்ள சிறிய தொழில் நகரம் காசியான்டெப். இங்கு நேற்று (06) அதிகாலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம்...

இந்தியாவில் டெஸ்ட் தொடரை வெல்வது என்பது மலையை சாய்ப்பது போல கடினமானது – ஸ்டீவ் ஸ்மித்

இந்தியா - ஆவுஸ்திரேலியா அணிகள் மோதும் பாா்டா் - காவஸ்கா் கிரிக்கெட் தொடா், டெஸ்ட் ஆட்டத்துடன் வியாழக்கிழமை நாளை (09) ஆரம்பமாகவுள்ளது.