Newsகச்சைதீவில் கைவைப்பது இலங்கை மீனவர்களின் வாழ்வாதாரத்தை அழிக்கும்

கச்சைதீவில் கைவைப்பது இலங்கை மீனவர்களின் வாழ்வாதாரத்தை அழிக்கும்

-

கச்சைதீவை மீளப்பெறுவதனால் இலங்கை மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்பதனை மிகவும் அனுதாபத்துடன் மு.க.ஸ்டாலினிடம் தெரிவிப்பதாக வடமாகாண அவைத்தலைவர் சீ.வி.கே.சிவஞானம் தெரிவித்தார்.

நேற்று (வியாழக்கிழமை) ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், “கச்சதீவு மீட்பு தொடர்பாக தமிழக மீனவர் சார்ந்த கருத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தற்கு அண்ணாமலையும் ஆதரித்து இருந்தார்.

ஆனால் உண்மையான நிலை எனனவென்றால் ஸ்டாலினை பொறுத்தவரையில் உலகத் தமிழர்களின் தலைவராக நாம் பார்க்கின்றோம்.

உலகத் தமிழர்களாக பார்க்கின்ற பொழுது இலங்கைத் தமிழர்களும் ஒன்றுதான் இந்தியா தமிழர்களும் ஒன்றுதான்.

தமிழக மீனவர்களை தவிர நம் நாட்டினுடைய தெற்குப்பகுதி மீனவர்களுடைய பாதிப்பும் எங்களுடைய வடக்கு மீனவர்களுக்கு இருக்கின்றது.

மட்டக்களப்பிலிருந்து முல்லைத்தீவு வரையான கடற்பரப்பில் சிங்கள மீனவர்கள் எங்களுடைய வளங்களை சுரண்டிக் கொண்டு செல்கின்றார்கள்.

இதனால் எங்களுடைய தமிழ் மீனவர்களும் பாதிக்கப்படுகின்றார்கள். இதன்காரணமாக சுயாதீனமாக நம்மவர்கள் கடற்தொழில் மேற்கொள்வதற்கு நெடுந்தீவு பகுதி கச்சதீவு பகுதிகளே களமாக இருக்கின்றது.

இவ்வாறான நிலையில் கச்சதீவை மீளப்பெறுவது என்பது எங்களுடைய மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்பதனை மிகவும் அனுதாபத்துடன் ஸ்டாலினிடம் தெரிவிக்கிறேன்” என்றார்.

Latest news

ஆஸ்திரேலியாவில் தினமும் தொலைந்துபோகும் 10 கடவுச்சீட்டுக்கள்

ஒவ்வொரு நாளும் 10 ஆஸ்திரேலிய சுற்றுலாப் பயணிகளில் 10 பேர் தங்கள் கடவுச்சீட்டு தொலைந்துவிட்டதாக அல்லது திருடப்பட்டதாகத் தெரிவிக்கின்றனர். கடந்த நிதியாண்டு தொடர்பாக வெளியுறவுத் துறை அமைச்சகம்...

ஆஸ்திரேலியாவில் ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்துவரும் வாடகை வீடுகளின் விலை

ஆஸ்திரேலிய தலைநகரங்களில் வாடகை வீடுகளின் விலை ஆண்டுக்கு ஆண்டு 13 சதவீதம் அதிகரித்துள்ளதாக சமீபத்திய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. சிட்னி, மெல்போர்ன் மற்றும் பிரிஸ்பேன் உள்ளிட்ட முக்கிய நகரங்கள்...

ஒரு மணி நேரத்திற்கு $1.5 மில்லியன் சம்பாதிக்கும் ஆஸ்திரேலியர்கள்!

ஆஸ்திரேலியாவின் பணக்காரர்கள் ஒரு மணி நேரத்திற்கு $1.5 மில்லியன் சம்பாதிப்பதாக சமீபத்திய அறிக்கைகள் தெரிவிக்கின்றன. அதன்படி, கடந்த இரண்டு ஆண்டுகளில் ஆஸ்திரேலியாவின் 47 பணக்கார பில்லியனர்களின் வருமானம்...

வாகனப் பராமரிப்பைத் தவிர்க்கும் பெரும்பாலான ஆஸ்திரேலிய கார் உரிமையாளர்கள்

தற்போதைய நிதி நெருக்கடி காரணமாக, 4ல் 1 ஆஸ்திரேலிய கார் உரிமையாளர்கள் தங்களது வாகன பராமரிப்பு சேவைகளை முறையாக மேற்கொள்ளவில்லை என தெரியவந்துள்ளது. ஃபைண்டரின் புதிய ஆய்வில்,...

24 ஓட்டங்களால் வென்றது கொல்கத்தா – IPL 2024

IPL தொடரில் நேற்று நடைபெற்ற போட்டியில் முன்னாள் சாம்பியன்களான மும்பை இந்தியன்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் நாணயசுழற்சியில் வென்ற மும்பை...