Newsசபரிமலையில் இன்று மகர விளக்கு பூஜை!

சபரிமலையில் இன்று மகர விளக்கு பூஜை!

-

சபரிமலை அய்யப்பன் கோவில் மண்டல பூஜை முடிவடைந்ததும் மகர விளக்கு பூஜைக்காக கடந்த மாதம் 30 ஆம் திகதி அய்யப்பன் கோவில் நடை திறக்கப்பட்டது. அன்று முதல் தினமும் சிறப்பு வழிபாடு நடந்து வருகிறது.

அய்யப்பனை தரிசிக்க மண்டல பூஜை நாட்களில் கட்டுக்கடங்காத கூட்டம் இருந்ததை போல் மகரவிளக்கு காலத்திலும் கூட்டம் அலைமோதியது. இந்தநிலையில் சிகர நிகழ்ச்சியாக மகரவிளக்கு பூஜை மற்றும் ஜோதி தரிசனம் இன்று (சனிக்கிழமை) நடக்கிறது.

இதனையொட்டி இன்று மாலை 6.20 மணிக்கு அய்யப்பனுக்கு ஆபரணங்களை அணிவித்து சிறப்பு தீபாராதனை நடத்தப்படுகிறது. அப்போது பொன்னம்பல மேட்டில் சாமி அய்யப்பன் பக்தர்களுக்கு ஜோதி வடிவில் 3 முறை காட்சி தருவார். அப்போது பக்தர்கள் சாமியே சரணம் அய்யப்பா… என்ற கோஷம் எழுப்புவர்.

இந்த ஆண்டு மகர ஜோதியை காண   இலட்சக்கணக்கான பக்தர்கள் சபரிமலையின் சுற்று வட்டார பகுதியில் குவிந்துள்ளனர். இதற்காக ஆங்காங்கே கூடாரங்கள் அமைத்து ஏற்கனவே தங்கியுள்ளனர். மேலும் ஏற்கனவே மகரவிளக்கு பூஜை நாளில் சபரிமலைக்கு வருவதற்கு முன்பதிவு செய்தவர்களும் இன்று குவிய உள்ளனர்.

எனவே கூட்ட நெரிசலை தவிர்க்க பாதுகாப்பு பணிக்காக பம்பை, சன்னிதானத்தில் 3 ஆயிரம் பொலிஸார், தேசிய பேரிடர் மீட்பு படையினர் குவிக்கப்பட்டு உள்ளனர்.

இதற்கிடையே நேற்று சன்னிதானத்தில் திருவிதாங்கூர் தேவஸ்தான தலைவர் அனந்தகோபன் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் மகரவிளக்கு பூஜைக்கான அனைத்து முன்னேற்பாடுகள் குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டது.

இந்த வருடம் கொரோனா பரவல் குறைந்து கட்டுப்பாடு நீக்கப்பட்டதால் மண்டல பூஜை, மகர விளக்கு காலத்தில் நேற்று வரை 56 நாட்களில் சபரிமலையில் 43 இலட்சம் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்துள்ளனர். இந்த காலங்களில் சபரிமலைக்கு கடந்த ஆண்டை விட வருமானம் அதிகமாக கிடைத்துள்ளது.

நன்றி தமிழன்

Latest news

ஆஸ்திரேலியா மீது கடுமையான குற்றச்சாட்டுகளை சுமத்தும் ரஷ்யா

கடந்த வாரம், அமெரிக்க உளவுத்துறை வலைத்தளமான ஜேன்ஸ், டார்வினுக்கு வடக்கே சுமார் 1,300 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இந்தோனேசிய மாகாணமான பப்புவாவில் உள்ள ஒரு விமான...

NSW-ல் இரு பாறைகளுக்கு இடையில் சிக்கிய குழந்தை

நியூ சவுத் வேல்ஸ் வடக்கு கடற்கரையில் பாறைகளில் விழுந்து ஒரு சிறுவன் உயிரிழந்தான். ஆஸ்திரேலியாவில் ஆறு பேர் நீரில் மூழ்கி இறந்ததை அடுத்து குறித்த சிறுவனின் மரணம்...

விண்கல் பொழிவைப் பார்க்க ஆஸ்திரேலியர்களுக்கு ஒரு வாய்ப்பு

ஆஸ்திரேலியர்கள் இன்றும் நாளையும் இரவு வானில் விண்கல் பொழிவை காண முடியும் என நாசா தகவல் வெளியிட்டுள்ளது. லிரிட் விண்கல் மழை இரவு வானில் ஒரு மணி...

மகன் செய்த தவறால் தந்தைக்கு விதிக்கப்பட்ட அபராதம்

தனது மகன் சட்டவிரோதமாக சாலை ஓட்டியதற்காக ஒரு தந்தைக்கு $700 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. குயின்ஸ்லாந்து காவல்துறை இந்த அபராதத்தை 50 வயது தந்தைக்கு விதித்தது. தனது 15 வயது...

மோசமான வானிலை காரணமாக கிரிக்கெட் போட்டிகள் இடைநிறுத்தப்படாது

மோசமான வானிலை காரணமாக கிரிக்கெட் போட்டிகள் இடைநிறுத்தப்படாமல் இருப்பதை உறுதி செய்வதில் அதிகாரிகள் கவனம் செலுத்துகின்றனர். கிரிக்கெட் ஆஸ்திரேலியாவின் தலைமை நிர்வாக அதிகாரி டாட் க்ரீன்பெர்க், அதிகாரிகள்...

சிறு வணிகங்கள் மீது விதிக்கப்படும் வரிகள் தளர்த்தப்படும் – பீட்டர் டட்டன்

சிறு வணிகங்கள் மீது விதிக்கப்படும் வரிகள் தளர்த்தப்படும் என்று ஆஸ்திரேலிய எதிர்க்கட்சித் தலைவர் பீட்டர் டட்டன் கூறுகிறார். சிட்னி ஒலிம்பிக் பூங்காவில் நடைபெற்ற ராயல் ஈஸ்டர் கண்காட்சியில்...