Newsதலை பொங்கல் விருந்தில் மருமகனுக்கு 379 வகையான உணவுகளை பரிமாறிய மாமியார்!

தலை பொங்கல் விருந்தில் மருமகனுக்கு 379 வகையான உணவுகளை பரிமாறிய மாமியார்!

-

ஆந்திராவில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தலை பொங்கல் கொண்டாடும் மருமகனுக்கு மிக பிரமாண்டமாக விருந்து வைப்பது சமீப ஆண்டுகளாக புகழ்பெற்று வருகிறது. போட்டி போட்டு வகை வகையாக மருமகன்களுக்கு விருந்து வைத்து பொங்கல் திருநாளில் பெயர் பெறுவதை ஆந்திராவில் பல்வேறு பகுதி மக்களும் பெருமையாக கருதுகிறார்கள்.

குறிப்பாக கோதாவரி மாவட்ட மக்கள் இத்தகைய விருந்து வைப்பதில் புகழ் பெற்று திகழ்கிறார்கள். கடந்த ஆண்டு மேற்கு கோதாவரி மாவட்டத்தில் தொழில் அதிபர் ஒருவர் தனது மருமகனுக்கு 365 வகைகளில் பொங்கல் விருந்து வைத்திருந்தார்.

இந்த ஆண்டு எலுரு நகரை சேர்ந்த தொழில் அதிபர் பீமாராவ் அந்த சாதனையை முறியடிக்க முடிவு செய்தார். அவர் மகள் குஷ்மாவை விசாகப்பட்டினம் அருகே உள்ள அனகாபள்ளியை சேர்ந்த புத்தா முரளிதர் என்பவருக்கு திருமணம் செய்து கொடுத்திருந்தார். இந்த ஆண்டு முரளிதருக்கு தலை பொங்கல் ஆகும்.

முரளிதரையும், மகள் குஷ்மாவையும் தொழில் அதிபர் பீஷ்மாராவ் தனது வீட்டுக்கு தலை பொங்கல் விருந்துக்கு அழைத்திருந்தார். நேற்று முன்தினம் அவர்களுக்கு தடபுடலாக விருந்து வைக்கப்பட்டது. விருந்தில் 379 வகையான உணவுகள் பரிமாறப்பட்டன. அந்த உணவு வகைகளை பார்த்து மருமகன் முரளிதர் கடும் அதிர்ச்சி அடைந்தார்.

379 வகையான உணவுகளில் 10 சதவீதத்தை கூட அவர் சாப்பிடவில்லை. என்றாலும், இந்த பிரமாண்ட விருந்து ஆந்திராவில் பரபரப்பாக பேசப்பட்டது.

நன்றி தமிழன்

Latest news

26 ஆண்டுகளுக்குப் பிறகு ஜாமீனில் விடுவிக்கப்படும் Snowtown கொலைகளுடன் தொடர்புடைய குற்றவாளி

வெகுஜனக் கொலையில் தொடர்புடைய கொலையாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்ட ஆஸ்திரேலியரான James Vlassakis, உலகின் முதல் பரோல் சட்டத்தின் கீழ் விடுவிக்கப்பட்டுள்ளார். வழங்கப்பட்ட பரோல் என்பது சிறையில் இருந்த...

NSW-வில் சாலை விபத்துகளைக் குறைக்க ஒரு புதிய வழி

குறைந்த தெரிவுநிலை கொண்ட சாலைகளில் ஓட்டுநர் பாதுகாப்பை அதிகரிக்கவும், சாலை அடையாளங்களை அதிகமாகத் தெரியும்படி செய்யவும் ஒரு புதிய பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. பகலில் சூரிய ஒளியை உறிஞ்சி...

அதிகரித்து வரும் சிகரெட் விலைகள் – சரிந்து வரும் சட்டப்பூர்வ சிகரெட் வணிகங்கள்

ஆஸ்திரேலியாவில் சட்டவிரோத சிகரெட் வணிகங்கள் பெருகி வருவதால், சட்டப்பூர்வ சிகரெட் வணிகங்கள் சரிந்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது. கடைகள் மற்றும் பெட்ரோல் விற்பனை நிலையங்கள் தான் பிரதானமானவை. மெந்தோல்...

குழந்தை துஷ்பிரயோகத்திற்கு YouTube கண்ணை மூடிக்கொண்டிருப்பதாக குற்றம்

உலகின் மிகப்பெரிய சமூக ஊடக நிறுவனங்கள் தங்கள் தளங்களில் வரும் ஆன்லைன் குழந்தைகள் பாலியல் துஷ்பிரயோகப் பொருட்களை இன்னும் "கண்மூடித்தனமாக" வைத்திருப்பதாக ஆஸ்திரேலியாவின் இணைய கண்காணிப்பு...