40 ஆண்டுகளுக்கு பிறகு Medicareல் பல திருத்தங்களை கொண்டு வர மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
அதன்படி, மருத்துவர்களுக்கு கூடுதலாக, செவிலியர்கள் மற்றும் உதவி மருத்துவக் குழுக்களின் சேவைகளுக்கு பணம் பெற முடியும்.
எதிர்வரும் மே மாதம் சமர்ப்பிக்கப்படவுள்ள வரவு செலவுத் திட்டத்தில் இந்த திருத்தங்கள் உள்ளடக்கப்படும் என சுகாதார அமைச்சர் மார்க் பட்லர் தெரிவித்துள்ளார்.
சுகாதாரத்துறை அபிவிருத்தியடைந்து வரும் நிலையில் நோயாளர்களுக்கு வசதிகளை ஏற்படுத்துவதே தொழிலாளர் அரசாங்கத்தின் திட்டம் என சுகாதார அமைச்சர் தெரிவித்தார்.
Medicare முறைக்கு முன்மொழியப்பட்ட மாற்றங்கள் அனைத்தும் வரும் வாரங்களில் மத்திய அரசால் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.