ஆஸ்திரேலிய ஃபெடரல் போலீஸ், சமூக ஊடகங்களில் பள்ளி மாணவர்களின் படங்களை வெளியிடும் போது கவனமாக இருக்குமாறு பெற்றோர்கள் மற்றும் பாதுகாவலர்களை எச்சரித்துள்ளது.
இன்று மற்றும் எதிர்வரும் நாட்களில் புதிய பள்ளி பருவம் தொடங்குவதை கருத்தில் கொண்டு பல மாநிலங்கள் இந்த எச்சரிக்கையை விடுத்து வருகின்றன.
சமூக வலைதளங்களில் பள்ளிக்குச் செல்லும் புகைப்படங்களை வெளியிடுவதன் மூலம், குழந்தைகளை பாலியல் வன்கொடுமை செய்பவர்கள் அவற்றை சட்டவிரோதமாக பயன்படுத்தக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பள்ளி மாணவர்களின் முகம் – பள்ளியின் லோகோ போன்ற – புகைப்படங்களை வெளியிட வேண்டாம் என்றும் மத்திய காவல்துறை அறிவுறுத்துகிறது.
இந்தப் புகைப்படங்களைப் பயன்படுத்தி ஆபாசமான புகைப்படங்களை உருவாக்கி கப்பம் கோரும் சம்பவங்களும் பதிவாகி வருவதாக அவர்கள் மேலும் குறிப்பிடுகின்றனர்.