Newsபாகிஸ்தான் பள்ளிவாசல் குண்டுவெடிப்பு – பலி எண்ணிக்கை 100 ஆக உயர்வு

பாகிஸ்தான் பள்ளிவாசல் குண்டுவெடிப்பு – பலி எண்ணிக்கை 100 ஆக உயர்வு

-

பாகிஸ்தானின் கைபர் பக்துங்வா மாகாணத்தின் தலைநகர் பெஷாவரில் பொலிஸ் குடியிருப்புகள் அமைந்துள்ள உயர் பாதுகாப்பு நிறைந்த பகுதியில் உள்ள பள்ளிவாசலில் தற்கொலைப்படை பயங்கரவாதி ஒருவர் தனது உடலில் கட்டிக்கொண்டு வந்திருந்த வெடிகுண்டுகளை வெடிக்க செய்தார்.

பயங்கர சத்தத்துடன் குண்டுகள் வெடித்து சிதறியதில் அந்த பகுதியே அதிர்ந்தது. குண்டுகள் வெடித்ததில் தொழுகை செய்து கொண்டிருந்த பலர் உடல் சிதறி பலியாகினர். மேலும் குண்டுவெடிப்பில் பள்ளிவாசலின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது.

இதில் ஏராளமானோர் இடிபாடுகளில் சிக்கினர். இதனிடையே உயர் பாதுகாப்பு நிறைந்த பகுதியில் நடத்தப்பட்ட இந்த தற்கொலைப்படை தாக்குதல் அங்கு கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.இந்த தற்கொலைப்படை தாக்குதலில் பலி எண்ணிக்கை 100- ஆக உயர்ந்துள்ளது.

பள்ளிவாசலில் நடத்தப்பட்ட தற்கொலைப்படை தாக்குதலுக்கு தலீபான் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.

பாகிஸ்தானி தலீபான் பயங்கரவாத அமைப்பின் தளபதி உமர் காலித் குராசானி கடந்த ஆண்டு ஒகஸ்ட் மாதம் ஆப்கானிஸ்தானில் நடத்தப்பட்ட தாக்குதலில் உயிரிழந்ததற்கு பழிவாங்கும் வகையில் பள்ளிவாசலில் தற்கொலைப்படை தாக்குதல் நடத்தப்பட்டதாக உமர் காலித் குராசானியின் சகோதரர் தெரிவித்துள்ளார்.

நன்றி தமிழன்

Latest news

வாகனப் பராமரிப்பைத் தவிர்க்கும் பெரும்பாலான ஆஸ்திரேலிய கார் உரிமையாளர்கள்

தற்போதைய நிதி நெருக்கடி காரணமாக, 4ல் 1 ஆஸ்திரேலிய கார் உரிமையாளர்கள் தங்களது வாகன பராமரிப்பு சேவைகளை முறையாக மேற்கொள்ளவில்லை என தெரியவந்துள்ளது. ஃபைண்டரின் புதிய ஆய்வில்,...

மேலும் பல குற்றச்சாட்டுகளை எதிர்நோக்கும் சமந்தா மர்பி காணாமல் போனமை தொடர்பான சந்தேகநபர்

விக்டோரியா மாகாணத்தில் கடந்த பெப்ரவரி மாதம் 4ஆம் திகதி முதல் காணாமல் போன சமந்தா மர்பி காணாமல் போனமை தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்டுள்ள சந்தேகநபர் மீது...

வாகனம் ஓட்ட மிகவும் ஆபத்தான நாடுகளின் வரிசையில் ஆஸ்திரேலியா

வாகனம் ஓட்டுவதற்கு மிகவும் ஆபத்தான வளர்ந்த நாடுகளின் தரவரிசைப்படி, ஆஸ்திரேலியா 18வது இடத்தில் உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் ஆஸ்திரேலிய அரசாங்கம் சர்வதேச சாலை பாதுகாப்பு தரப்படுத்தல் அறிக்கையை...

ஆஸ்திரேலியர்கள் குறைவாக உண்ணும் உணவுகள் குறித்து வெளியான புதிய அறிக்கை

வாழ்க்கைச் செலவைக் கருத்தில் கொண்டு , ஆஸ்திரேலியர்கள் காய்கறிகள், பழங்கள் மற்றும் பால் ஆகியவை குறைவாக உட்கொள்ளும் உணவுகள் என்று கண்டறிந்துள்ளனர். கடந்த நிதியாண்டைக் காட்டிலும் இந்த...

ஆஸ்திரேலியர்கள் குறைவாக உண்ணும் உணவுகள் குறித்து வெளியான புதிய அறிக்கை

வாழ்க்கைச் செலவைக் கருத்தில் கொண்டு , ஆஸ்திரேலியர்கள் காய்கறிகள், பழங்கள் மற்றும் பால் ஆகியவை குறைவாக உட்கொள்ளும் உணவுகள் என்று கண்டறிந்துள்ளனர். கடந்த நிதியாண்டைக் காட்டிலும் இந்த...

“மேதகு” இசையமைப்பாளர் பிரவீன் குமார் காலமானார்

மேதகு மற்றும் இராக்கதன் உள்ளிட்ட திரைப்படங்களுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் பிரவீன் குமார் நேற்று 2ம் திகதி காலமானார். அவரது மறைவு திரைத்துறையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 2021ஆம் ஆண்டு தமிழீழ...