Newsவிக்டோரிய மாநில கிரிக்கெட்டில் சாதித்துவரும் தமிழ்ப் பெண்கள்!

விக்டோரிய மாநில கிரிக்கெட்டில் சாதித்துவரும் தமிழ்ப் பெண்கள்!

-

விக்டோரிய மாநிலமானது 16 வயதுக்குட்பட்ட பெண்கள் தேசிய சாம்பியன்ஷிப் போட்டிகளுக்கான தனது இரண்டு (Vic Metro மற்றும் Vic Country) அணிகளைக் கடந்த நவம்பர் மாதம் தெரிவு செய்திருந்தது.

தலா பதின்மூன்று பேர் கொண்ட அவ்விரு அணிகளிலும் நம்மவர்கள் இருவர் தெரிவாகி விளையாடிவருகின்றனர்.

அந்த இளம் தமிழ்ப் பெண்களான திவ்யா மகேந்திரன் மற்றும் ஷிவானி நரேந்திரன் ஆகியோர் ஆவர்.

திவ்யா மகேந்திரன் Vic Country அணிக்காகவும், ஷிவானி நரேந்திரன் Vic Metro அணிக்காகவும் விளையாடிக்கொண்டிருக்கின்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

திவ்யா மகேந்திரன் 2014ம் ஆண்டிலிருந்து தனது கிரிக்கெட் வாழ்க்கையை ஆரம்பித்தார்.

சிறுவயதில் தன் தந்தையுடன் கிரிக்கெட் பார்ப்பதில் ஆரம்பித்ததாம் இருவருடைய கிரிக்கெட் ஆர்வம்.

பொதுவாக இலங்கை மற்றும் இந்திய பின்னணி கொண்ட குடும்பம்இ தன் குழந்தைகளின் படிப்பை மட்டுமே முக்கியமாக கருதும். ஆனால் திவ்யா மகேந்திரன் மற்றும் ஷிவானி நரேந்திரன் ஆகியோரின் குடும்பங்கள் தன் பிள்ளைகளின் படிப்பை தொடர்ந்து விளையாட்டிலும் உதவிசெய்து உறுதுணையாக இருப்பது பாராட்டத்தக்கது.

திவ்யா மகேந்திரன் மற்றும் ஷிவானி நரேந்திரன் இருவருக்கும் தமிழ் ஆஸ்திரேலியன் சார்பாக வாழ்த்துக்கள்.

Latest news

முதல் ராக்கெட் ஏவுதலுக்கு தயாராகியுள்ள ஆஸ்திரேலியா

விண்வெளிக்குச் சென்று எலோன் மஸ்க்கின் SpaceX உடன் போட்டியிடத் தொடங்கும் ஆஸ்திரேலிய நிறுவனத்தின் கனவுக்கான நேரம் தொடங்கிவிட்டது. ஆஸ்திரேலிய விண்வெளி மற்றும் உற்பத்தி வரலாற்றில் ஒரு மைல்கல்...

 3 ஆஸ்திரேலிய மாநிலங்களில் நிலவும் வரலாறு காணாத அளவு வறட்சி

இந்த ஆண்டு வரலாறு காணாத வறட்சி ஆஸ்திரேலியாவின் மூன்று மாநிலங்களை பாதித்துள்ளது. இந்த ஆண்டு விக்டோரியா மற்றும் டாஸ்மேனியாவின் சில பகுதிகள் கடுமையான வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளதாக வானிலை...

வரலாற்றில் முதல் முறையாக லிபரல் கட்சியை வழிநடத்தும் ஒரு பெண்

ஆஸ்திரேலிய வரலாற்றில் லிபரல் கட்சியை வழிநடத்தும் முதல் பெண்மணி என்ற பெருமையை Sussan Ley பெற்றுள்ளார். அதன்படி, ஆங்கஸ் டெய்லரை எதிர்த்து லிபரல் கூட்டணியின் தலைமையை Sussan...

ஆஸ்திரேலியாவில் மருந்துகளின் விலை உயரக்கூடும் என அச்சம்

அமெரிக்காவில் மருந்துகளின் விலையை குறைக்கும் நோக்கில் ஜனாதிபதி ட்ரம்ப் நிர்வாக உத்தரவில் கையெழுத்திடுவதாக அறிவித்ததைத் தொடர்ந்து ஆஸ்திரேலியாவில் மருந்துகளின் விலை உயரக்கூடும் என்ற அச்சம் எழுந்துள்ளது. திங்கட்கிழமை...

வரலாற்றில் முதல் முறையாக லிபரல் கட்சியை வழிநடத்தும் ஒரு பெண்

ஆஸ்திரேலிய வரலாற்றில் லிபரல் கட்சியை வழிநடத்தும் முதல் பெண்மணி என்ற பெருமையை Sussan Ley பெற்றுள்ளார். அதன்படி, ஆங்கஸ் டெய்லரை எதிர்த்து லிபரல் கூட்டணியின் தலைமையை Sussan...