Cinemaமூத்த இயக்குனர் கே.விஸ்வநாத் காலமானார்!

மூத்த இயக்குனர் கே.விஸ்வநாத் காலமானார்!

-

இந்தியத் திரையுலகின் மூத்த இயக்குனர்களுள் ஒருவர் கே.விஸ்வநாத் (92). வயது மூப்பால் கடந்த சில காலமாகவே சினிமாவில் இருந்து விலகி ஐதராபாத்தில் தனது குடும்பத்துடன் ஓய்வெடுத்து வந்தார்.

இந்நிலையில், ஐதராபாத் இல்லத்தில் கே.விஸ்வநாத் நேற்று (02) நள்ளிரவில் காலமானார். அவரது மறைவுக்கு இந்திய திரையுலகினர் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

1965ஆம் ஆண்டில் இயக்குனராக அறிமுகமான கே.விஸ்வநாத், தான் இயக்கிய முதல் படமான “ஆத்ம கௌரவம்” படத்துக்கு சிறந்த இயக்குனர் மற்றும் சிறந்த படத்துக்கான நந்தி விருதை வென்றார்.

தமிழில் சலங்கை ஒலி, சிப்பிக்குள் முத்து ஆகிய படங்களை இயக்கியுள்ளார். மேலும், குருதிப்புனல், முகவரி, ராஜபாட்டை, யாரடி நீ மோகனி, லிங்கா, உத்தம வில்லன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

இந்திய சினிமாவின் உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருது மற்றும் பத்ம ஸ்ரீ’விருது வழங்கி இந்திய அரசு கௌரவித்துள்ளது. 7 முறை நந்தி விருது, 5 முறை தேசிய விருது வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

நன்றி தமிழன்

Latest news

காட்டுத் தீயால் ஆதரவற்ற கங்காருக்களுக்கு தன் வீட்டைக் கொடுத்த வனவிலங்கு அதிகாரி

விக்டோரியாவில் 74000 ஹெக்டேர் பரப்பளவில் வேகமாக பரவிய காட்டுத்தீ காரணமாக பல வன விலங்குகள் நகரங்களுக்கு வந்துள்ளன. காட்டுத் தீயினால் ஆதரவற்ற விலங்குகளுக்கு தங்குமிடங்களை வழங்க வனவிலங்கு...

பிரதமரால் ஒரு கட்சியின் முகநூல் கணக்கிற்கு விடுக்கப்பட்டுள்ள உத்தரவு

எதிர்க்கட்சித் தலைவர் பீட்டர் டட்டன் மற்றும் அவரது மனைவியை இழிவுபடுத்தும் வகையில் சமூக வலைதளங்களில் இருந்து ஒரு பதிவை நீக்குமாறு விக்டோரியன் தொழிலாளர் கட்சிக்கு பிரதமர்...

ஆப்கானிஸ்தான் வீடுகளில் ஜன்னல் வைக்க தடை

ஆப்கானிஸ்தானில் 2021 ஆம் ஆண்டு தலிபான் ஆட்சி பொறுப்பேற்ற பிறகு பெண்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. பெண்கள் ஆரம்ப கல்வி கற்கவும், பூங்கா உள்ளிட்ட பொது இடங்களுக்கு...

மறக்கப்பட்ட $21 மில்லியன் லாட்டரி வெற்றிகள்

21.42 மில்லியன் டொலர்களுக்கு மேல் பெறுமதியான இந்த வருடத்திற்கான 24 பிரதான லாட்டரி பரிசுகளை வென்றவர்கள் முன்வரவில்லை என தெரியவந்துள்ளது. கோரப்படாத பத்து பரிசுகள் $1 மில்லியன்...