News இந்திய அமைச்சர் ஜோதிர் ஆதித்யா சிந்தியா மாளிகையின் மதிப்பு 4000 கோடி

இந்திய அமைச்சர் ஜோதிர் ஆதித்யா சிந்தியா மாளிகையின் மதிப்பு 4000 கோடி

-

இந்திய விமான துறை அமைச்சராக இருக்கும் ஜோதிர் ஆதித்யா சிந்தியாவின் ’ஜெய் விலாஸ் மஹால்’ மாளிகையின் இன்றைய மதிப்பு 4000 கோடி ரூபாய் என்று கூறப்படுவது . குவாலியர் மாகாணத்தில் அரச குடும்பத்தைச் சேர்ந்த ஜோதிர் ஆதித்யா சிந்தியாவின் வம்சாவளிகள் தொடர்ந்து இந்த மாளிகையில் தான் வாழ்ந்து வருகிறார்கள்.

1874 ஆம் ஆண்டு பிரிட்டிஷ் காலத்தில் கட்டப்பட்ட இந்த மாளிகையின் இன்றைய இந்திய மதிப்பு ரூ.4,000 கோடி. ஐரோப்பிய கட்டடக்கலையின் அடிப்படையில் மைக்கேல் ஃபிலோஸ் என்பவர் இந்த மாளிகையை கட்டினார். ஒரு லட்சத்து 24 ஆயிரத்து 771 சதுர அடி பரப்பளவைக் கொண்ட ஜெய் விலாஸ் மாளிகை மூன்றடுக்கு கட்டிடமாக பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டுள்ளது.

இந்த மாளிகை 1874 ஆம் ஆண்டு கட்டப்பட்ட போது ஒரு கோடி ரூபாய் மதிப்பிலானது என்றும் இன்றைய மதிப்பு ரூ.4,000 கோடி என்றும் கணக்கிடப்பட்டுள்ளது. இந்த மாளிகையில் மொத்தம் 400 அறைகள் உள்ளன. இதில் 35 அறைகள் தற்போது அருங்காட்சியகமாக மாற்றப்பட்டுள்ளது. இந்த மியூசியத்தில் ஜான்சிராணி பயன்படுத்திய வாள்கள் மற்றும் முன்னோர்கள் பயன்படுத்திய பல்வேறு கலை அம்சங்கள் கொண்ட பொருட்கள், முன்னோர்கள் பயன்படுத்திய ஆடம்பர கார்கள் ஆகியவை வைக்கப்பட்டுள்ளன.

இந்த மாளிகையில் உள்ள உணவருந்தும் கூடத்தில் அமைக்கப்பட்டுள்ள மேஜை ரயில் தண்டவாளம் போல் நகரக்கூடிய வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மாளிகையை அலங்காரம் செய்வதற்கு 560 கிலோ தங்கம் உள்பட விலை உயர்ந்த பொருட்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இந்த மாளிகையின் மேல்தளம், எட்டு யானைகளை கொண்டு நிறுத்தினாலும் உறுதிபட நிற்கும் என்பது ஒரு ஆச்சரியமான தகவல்.

Latest news

அதிகரிக்கப்படும் ஓய்வு பெற்றவர்களை மீண்டும் பணியில் அமர்த்துவதற்கான கொடுப்பனவு மற்றும் பணிக்கான போனஸ் இருப்பு தொகை

ஆஸ்திரேலியாவில் வேலைவாய்ப்பு தொடர்பான பல திருத்தங்களை மத்திய அரசு அறிவித்துள்ளது. இதன்படி, பணியாளர்களை விரிவுபடுத்தும் நோக்கில், தற்போது ஓய்வு...

சட்டவிரோத மின்-சிகரெட்டுகளை கட்டுப்படுத்த NSW முடிவு

சட்டவிரோத எலக்ட்ரானிக் சிகரெட் விற்பனை மற்றும் பயன்பாட்டை கட்டுப்படுத்தும் வகையில் சட்டங்களை கடுமையாக்க நியூ சவுத் வேல்ஸ் முடிவு செய்துள்ளது.

மெல்போர்னின் வடக்கே பல பகுதிகளில் லேசான நடுக்கம்

மெல்போர்னின் பல வடக்குப் பகுதிகளில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. மெல்போர்ன் சிபிடியில் இருந்து சுமார் 20 கிலோமீட்டர் தொலைவில்...

வாக்கெடுப்பில் “YES” முகாமுக்கான ஆதரவு சதவீதம் மேலும் குறைந்துள்ளது

சுதேசி ஹடா வாக்கெடுப்பில், YES முகாமுக்கான ஆதரவு சதவீதம் மேலும் குறைந்துள்ளது. நியூஸ்போல் நடத்திய சமீபத்திய கருத்துக் கணிப்பில்,...

வடக்கு மாகாண முதலமைச்சரை தாக்கியதாக பெண் மீது குற்றம்

வடமாகாண முதலமைச்சர் நடாஷா ஃபைல்ஸ் தாக்கப்பட்டமை தொடர்பில் பெண் ஒருவருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 56 வயதுடைய...

உலகக் கோப்பை ரக்பியில் இருந்து வெளியேறிய ஆஸ்திரேலியா

ரக்பி உலகக் கோப்பையில் இருந்து ஆஸ்திரேலியா விலக வேண்டியதாயிற்று. அது வேல்ஸ் அணிக்கு எதிரான தோல்வியுடன்.