News20 லட்சத்தை திருடி விட்டு 'ஐ லவ் யூ' என எழுதி...

20 லட்சத்தை திருடி விட்டு ‘ஐ லவ் யூ’ என எழுதி வைத்து விட்டு போன வினோத திருடன்

-

இந்தியாவின் தெற்கு கோவாவில் உள்ள மார்கோ நகரில் பங்களா ஒன்றின் உரிமையாளர் வீட்டை பூட்டி விட்டு, இரண்டு நாட்கள் வெளியூர் சென்றுள்ளார். இதை கவனித்துக் கொண்டிருந்த திருடன் ஒருவன், பூட்டை உடைத்து, வீட்டில் இருந்த 20 லட்சம் மதிப்பிலான தங்கம் மற்றும் வெள்ளி நகைகள், 1.5 லட்சம் பணம் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றுள்ளான்.

I Love You post-it note on the mirror

வீட்டில் இருந்த பொருட்களை திருடிய பிறகு, வீட்டில் இருந்த டிவி திரையில் ‘ஐ லவ் யூ’ என மார்க்கரால் எழுதி வைத்து விட்டு, தப்பிச் சென்றுள்ளான். இரண்டு நாட்கள் விடுமுறை முடிந்து வீடு திரும்பிய வீட்டின் உரிமையாளர், பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். உடனடியாக போலீசுக்கு தகவல் தெரிவித்து, புகார் அளித்துள்ளார்.

I Love You Handwritten On Paper. Greetings written by hand.

இப்படி வினோதமாக கொள்ளையடித்து சென்றுள்ள திருடனின் செயலால் போலீசுக்கே குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. கொள்ளையடித்த பிறகு எதற்காக ஐ லவ் யூ என எழுதி வைத்து விட்டு சென்றுள்ளான் என்பது பற்றியும் போலீசார் விசாரணையை துவக்கி உள்ளனர். இந்த கொள்ளை சம்பவத்தில் ஒன்று அல்லது பலர் ஈடுபட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.

தெற்கு கோவாவில் நடந்த இந்த வினோத கொள்ளை சம்பவம், முதலில் சிரிப்பை ஏற்படுத்தி இருந்தாலும், பொதுமக்கள் கவனமாக இருக்க வேண்டியதையும் அறிவுறுத்துவதாக உள்ளது. திருட்டு சம்பவம் அதிகரித்து வருவதால் கோவாவில் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

Latest news

உக்ரைன் – ரஷ்ய போர் – ஒரு வாரத்தில் 25,000 வீரர்கள் உயிரிழப்பு

உக்ரைன் - ரஷ்யா இடையிலான போரில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 25 ஆயிரம் வீரர்கள் கொல்லப்பட்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இரு நாடுகளுக்கு...

நாய் தாக்கினால் அஞ்சல் விநியோகம் இல்லை – Australia Post

கிறிஸ்துமஸ் பருவத்திற்கு முன்னதாக, செல்லப்பிராணி உரிமையாளர்கள் தங்கள் செல்லப்பிராணிகளை முறையாகப் பாதுகாக்குமாறு ஆஸ்திரேலியா போஸ்ட் வலியுறுத்துகிறது. பணியில் இருக்கும்போது அஞ்சல் ஊழியர்கள் மீது நாய் தாக்குதல்கள் வியத்தகு...

Heard தீவில் வைரஸ் உறுதி – ஆஸ்திரேலியாவிற்கும் ஆபத்து

H5 பறவைக் காய்ச்சல் வைரஸ் Heard தீவை அடைந்ததை அதிகாரிகள் முதல் முறையாக உறுதிப்படுத்தியுள்ளனர். இறந்த யானை முத்திரைகளின் மாதிரிகளை பரிசோதித்த பிறகு, விஞ்ஞானிகள் தீவில்...

2025 ஆம் ஆண்டில் ஆஸ்திரேலியாவில் அதிகம் ஆர்டர் செய்யப்பட்ட உணவு

2025 ஆம் ஆண்டிற்கான ஆஸ்திரேலியாவின் "அதிகாரப்பூர்வமற்ற தேசிய உணவாக" Hot Chips பெயரிடப்பட்டுள்ளது. நாடு முழுவதும் டெலிவரி மற்றும் ஆர்டர் புள்ளிவிவரங்களை பதிவு செய்த புதிதாக வெளியிடப்பட்ட...

Uber Eats மற்றும் Menulog ஒப்பந்தத்தால் யார் பயனடைவார்கள்?

ஆஸ்திரேலிய சேவையான Menulog மற்றும் Uber Eats இடையே ஒரு ஒப்பந்தம் கையெழுத்தானது. நவம்பர் 26 ஆம் திகதி நள்ளிரவில் Menulog முடிந்த பிறகு, வாடிக்கையாளர்கள் Uber...

ஆஸ்திரேலிய சபையில் புர்கா அணிந்து வந்த தலைவரால் பரபரப்பு

ஆஸ்திரேலிய செனட் சபையில் பெண் தலைவர் புர்கா அணிந்து வந்தது சீற்றத்தைத் தூண்டியது. One Nation தலைவர் பவுலின் ஹான்சன், செனட் சபைக்கு கருப்பு புர்கா மற்றும்...