Cinema சமந்தா சென்ற கார் ஆற்றில் கவிழ்ந்து விபத்து...காயங்களுடன் மீட்பு

சமந்தா சென்ற கார் ஆற்றில் கவிழ்ந்து விபத்து…காயங்களுடன் மீட்பு

-

தென்னிந்திய சினிமாவில் பிரபலமான நடிகையாக இருக்கும் சமந்தா, விஜய் தேவரகொண்டாவுடன் இணைந்து குஷி என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய நான்கு மொழிகளில் இந்த ஆண்டு டிசம்பர் மாதம் 23 ம் தேதி ரிலீஸ் செய்யப்பட உள்ளது. காதலை மையமாகக் கொண்டு குஷி படம் எடுக்கப்பட்டு வருகிறது.

குஷி படத்தின் முதல் பார்வை சமீபத்தில் வெளியிடப்பட்டு, ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு காஷ்மீரில் நடைபெற்றது. கடந்த ஒரு மாதங்களாக நடைபெற்ற படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்தது. படப்பிடிப்பின் போது, பாலத்தின் மீது காரில் செல்வது போல் சண்டைக் காட்சிகள் எடுக்கப்பட்டது. ஆற்றின் குறுக்கே கயிற்றால் தடுப்புகள் அமைத்து உருவாக்கப்பட்டுள்ள பாலத்தில் படப்பிடிப்பு நடத்தப்பட்ட போது கார் ஆற்றில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது.

இந்த விபத்தில் சமந்தா மற்றும் விஜய் தேவரகொண்டாவிற்கு முதுகில் காயம் ஏற்பட்டுள்ளது. உடனடியாக அவர்கள் மீட்கப்பட்டு, முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. இதற்கு முன்பும் எடுக்கப்பட்ட சண்டைக் காட்சியில் இருவருக்கும் கடுமையான தீக்காயம் ஏற்பட்டுள்ளது. தற்போது சமந்தா மற்றும் விஜய் தேவரகொண்டா ஓய்வில் இருப்பதாக கூறப்படுகிறது.

இதற்கிடையில் மற்றொரு தகவலாக, படப்பிடிப்பு தளத்தில் அப்படி எந்த விபத்தும் நடைபெறவில்லை. விபத்து நடைபெற்றதாக வெளியான தகவல்கள் அனைத்தும் வெறும் வதந்திகள் என படக்குழு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் விபத்து நடந்து அதில் சமந்தாவிற்கும், விஜய் தேவரகொண்டாவிற்கும் காயம் ஏற்பட்டது உண்மையா என தெரியாமல் ரசிகர்கள் குழப்பத்தில் உள்ளனர்.

Latest news

நாளை வேலை நிறுத்தம் செய்யவிருக்கும் 200 குவாண்டாஸ் விமானிகள்

சம்பள உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை அடுத்த 24 மணி நேரத்தில் நிறைவேற்றாவிட்டால், அடுத்தகட்ட தொழில்துறை நடவடிக்கை எடுக்கப்படும் என குவாண்டாஸ் விமானிகள் தெரிவித்துள்ளனர்.

4வது மாதத்திற்கான வட்டி விகிதங்களில் மாற்றம் இல்லை

இன்று நடைபெற்ற பெடரல் ரிசர்வ் வங்கியின் நிர்வாகக் குழு கூட்டத்தில் வட்டி விகிதத்தில் மாற்றம் செய்யப்படவில்லை. அதன்படி, ரொக்க...

தொழிற்பயிற்சி கல்விக்கு $37.8 மில்லியன் கூடுதல் ஒதுக்கீடு

தொழிற்பயிற்சி கல்வி மேம்பாட்டிற்காக கூடுதலாக 37.8 மில்லியன் டாலர்களை ஒதுக்கீடு செய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. செய்தியாளர்களிடம்...

Yes23 பிரச்சாரத்திற்கு ஒரு எச்சரிக்கை

வாக்கெடுப்பில் முன்மொழிவுக்கு ஆதரவாக செயல்படும் Yes23 பிரச்சாரத்திற்கு தேசிய தேர்தல் ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்படி, தேர்தல் ஆணையத்தின்...

கிழக்கு விக்டோரியாவில் அபாய நிலையில் உள்ள காட்டுத் தீ

கிழக்கு விக்டோரியாவின் பல பகுதிகளில் காட்டுத்தீ அபாயகரமான நிலையை எட்டியுள்ளது. பல புறநகர் பகுதிகளில் உள்ள மக்களை விரைவில்...

போதைப்பொருள் குறித்த விழிப்புணர்வு இளைஞர் சமூகத்திற்கு இல்லை என தெரியவந்துள்ளது

அவர்கள் பயன்படுத்தும் போதைப்பொருள் தொடர்பில் இந்த நாட்டில் இளைஞர்கள் மத்தியில் விழிப்புணர்வு இல்லை என கணக்கெடுப்பு ஒன்று அடையாளம் காணப்பட்டுள்ளது.