Cinemaநான் இந்தியன்...சினிமாவில் எதற்காக இந்த பாகுபாடு...கமலின் அசத்தல் பேச்சு

நான் இந்தியன்…சினிமாவில் எதற்காக இந்த பாகுபாடு…கமலின் அசத்தல் பேச்சு

-

நடிகர் கமல்ஹாசன் தற்போது விக்ரம் படத்தில் நடித்து முடித்து முடித்துள்ளார். கைதி, மாஸ்டர் ஆகிய வெற்றி படங்களை இயக்கி பிரபலமான இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கி உள்ள இந்த படம் எதிர்வரும் ஜுன் மாதம் 3 ம் தேதி வெளியாக உள்ளது. உலகம் முழுவதும் 5 மொழிகளில் இந்த படம் வெளியிடப்பட உள்ளது. இந்த படத்தில் பார்வையிழந்த முன்னாள் போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் கமல்ஹாசன் நடித்துள்ளதாக கூறப்படுகிறது.

விஸ்வரூபம் 2 படத்திற்கு பிறகு ஏறக்குறைய 4 ஆண்டுகளுக்கு பிறகு கமல் நடித்துள்ள படம் இது. அதனால் ரசிகர்கள் உள்ளிட்ட அனைவரும் இந்த படத்தை ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். நடிகர்கள் விஜய் சேதுபதி, ஃபகத் ஃபாசில், சூர்யா உள்ளிட்ட பல பெரிய நடிகர்கள் நடித்துள்ள இந்த படத்தை வெளியிடுவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது. பல்வேறு நாடுகளில் விக்ரம் படத்தை பிரபலப்படுத்தும் நிகழ்ச்சிகளை நடத்த படக்குழு ஏற்பாடு செய்துள்ளது.

இந்த சமயத்தில் செய்தியாளர்களை சந்தித்த கமல், அவர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார். அப்போது பேசிய கமல், “விக்ரம் 3 படம் எடுக்கப்பட்டால் நிச்சயம் அந்த படத்திற்கும் லோகேஷ் கனகராஜ் தான் இயக்குனராக இருப்பார். இந்தியன் 2 படம் கைவிடப்பட்டதாக சில தகவல்கள் பரவி வருகின்றன. அது உண்மையில்லை. விரைவில் இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்புக்கள் துவங்கப்பட உள்ளது. அதற்கான பேச்சுவார்த்தைகள் நடந்து கொண்டிருக்கிறது.

சினிமாவை வடக்கு, தெற்கு என எதற்காக பிரிக்கிறீர்கள் என என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. சினிமா துறை என்பது ஒன்று தான். நான் இந்தியன். தாஜ்மஹால் என்னுடையது, மதுரை கோயில் உங்களுடையது என என்னால் சொல்ல முடியாது. கன்னியாக்குமரி என்னுடையது, காஷ்மீர் உங்களுடையது என பிரிக்க முடியாது. அப்படி இருக்கையில் சினிமாவை மட்டும் ஏன் பாகுபாடு பார்க்கிறீர்கள். அனைத்தும் அனைவருக்கும் சொந்தம் என்பதை போல் சினிமாவும் அனைவருக்கும் பொதுவானது” என கமல் தெரிவித்துள்ளார்.

Latest news

விக்டோரியா காவல்துறையின் தலைமை ஆணையராக நியமிக்கப்பட்ட வெளிநாட்டவர்

நியூசிலாந்து முன்னாள் காவல் ஆணையர் Mike Bush, விக்டோரியா காவல்துறையின் தலைமை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் ஜூன் 27 அன்று பதவியேற்பார். விக்டோரியா காவல்துறையில் ஏற்பட்ட தலைமை...

உலகின் சிறந்த மருத்துவர்களாக ஆஸ்திரேலிய மருத்துவர்கள்

உலகின் சிறந்த மருத்துவர்களைக் கொண்ட நாடுகளில் ஆஸ்திரேலியா ஒரு உயர் இடத்தைப் பிடித்துள்ளது. சுகாதாரப் பராமரிப்பு என்பது ஒரு உன்னதமான தொழில், இது பல வருட கல்வி...

பிரதமர் அல்பானீஸின் 2வது பதவிக்காலத்தில் ஆஸ்திரேலியாவில் என்னென்ன மாற்றங்கள் ஏற்படும்?

பிரதம மந்திரி அந்தோணி அல்பானீஸ் மற்றும் தொழிலாளர் கட்சி பில்லியன் கணக்கான டாலர்களை உறுதியளித்து இரண்டாவது முறையாக வெற்றி பெற்றுள்ளார். அதன்படி, எதிர்காலத்தில் பல மாற்றங்கள் ஏற்படும்...

பூமியில் விழ காத்திருக்கும் காஸ்மோஸ் 482 விண்கலம்

வெள்ளி கிரகத்தை ஆய்வு செய்வதற்காக சோவியத் யூனியன் 1972ம் ஆண்டு அனுப்பப்பட்ட காஸ்மோஸ் 482 எனும் விண்கலம் அதிக வெப்பத்தை தாங்கும் அளவுக்கு வடிவமைக்கப்பட்டிருந்தது. ஆனால் டைமர்...

பூமியில் விழ காத்திருக்கும் காஸ்மோஸ் 482 விண்கலம்

வெள்ளி கிரகத்தை ஆய்வு செய்வதற்காக சோவியத் யூனியன் 1972ம் ஆண்டு அனுப்பப்பட்ட காஸ்மோஸ் 482 எனும் விண்கலம் அதிக வெப்பத்தை தாங்கும் அளவுக்கு வடிவமைக்கப்பட்டிருந்தது. ஆனால் டைமர்...

ஆஸ்திரேலியாவில் உயர்நிலைப் பள்ளிகளுக்கு ஓட்டுநர் பயிற்சியா?

உயர்நிலைப் பள்ளி பாடத்திட்டத்தில் ஓட்டுநர் பாடநெறிகளை அறிமுகப்படுத்தும் முடிவில் உள்ளூர் அரசாங்கங்களும் அரசு சாரா பள்ளி அதிகாரிகளும் கவனம் செலுத்த வேண்டும் என்று கல்வித் துறை...