Articleபசி, பட்டினியை நோக்கி இலங்கை.. 6 லட்சம் அரசு ஊழியர்களுக்கு வேலை...

பசி, பட்டினியை நோக்கி இலங்கை.. 6 லட்சம் அரசு ஊழியர்களுக்கு வேலை போகும் அபாயம்

-

ஆட்சி மாறி, புதிய பிரதமர் வந்த பிறகும் கூட இலங்கையின் நிலைமை மோசமாகி வருகிறது. IMF கடன் மறு சீரமைப்பின் கீழ் சுமார் 6 லட்சம் அரச ஊழியர்கள் வேலை இழக்கலாம். முடிவில் நடுத்தர வர்க்கம் என்ற ஒன்று இல்லாமல் போகும்.. என்ற அச்சம் எழுந்துள்ளது.

வாழ்ந்தால் வாழுங்கள், இல்லையேல் செத்து மடியுங்கள் என்பது போலதான் இருக்கிறது பெட்ரோலியப் பொருட்களின் விலை உயர்வு. கிட்டத்தட்ட 30% அளவுக்கு விலை உயர்த்தப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக அத்தியாவசியப் பொருட்களின் விலையும் உயரும், மின்சார கட்டணம் 100 வீதம் அதிகரிக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

விலை உயர்வு காரணமாக மக்கள் தொகையின் 80 சதவீதம் பேர் கடுமையாக பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. தினசரி செலவுகள் அதிகரிக்கும், பசி, பட்டினி அதிகரிக்கும் வாய்ப்பும் உள்ளது. IMF உடனான பேச்சுவார்த்தைகள், அதிகாரிகள் மட்டத்தை தாண்டவில்லை. இந்த பேச்சுவார்த்தைகள் ஒரு நம்பிக்கை தரும் அளவுக்கு வர 6-8 மாதங்கள் எடுக்கலாம். இந்த கால பகுதியில் அரசாங்கம் எந்தவித விலை கட்டுப்பாடுகளையும் கொண்டிருக்கமுடியாது. காரணம் ஐஎம்எப் உடன் பேச்சுவார்த்தை முடியும் வரை அரசு எதையும் நிர்ணயிக்க முடியாது. இதுதான் ஐஎம்எப்பின் விதியாகும்.

ஐஎம்எப் உடன் பேச்சுவார்த்தை நடத்த, சட்ட உதவிகளைச் செய்ய Clifford Chance என்ற நிறுவனத்தை இலங்கை அரசாங்கம் தேர்வு செய்துள்ளது. நிதித்துறை ஆலோசனை உதவிகளை வழங்க பிரெஞ்சு நிறுவனமான Lazard நியமிக்கப்பட்டுள்ளது. பேச்சுக்களை தொடங்க முன் நிபந்தனையாக எரி பொருட்களுக்கான எல்லா சலுகலைகளையும் நீக்குமாறு இலங்கை அரசாங்கம் கேட்டுக் கொள்ளப்படும் என்று இது தொடர்பாக ராய்ட்டர்ஸ் வெளியிட்டுள்ள குறிப்பு ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை விட முக்கியமாக, அரசு ஊழியர்கள் எண்ணிக்கை அப்படியே பாதியாக குறையும் நிலை ஏற்பட்டுள்ளது. எரிபொருள் சேமிப்பை காரணம் காட்டி அத்தியாவசிய ஊழியர்களை மட்டும் வேலைக்கு அழைத்தல் என்பது ஒரு பெரும் வேலைநீக்க திட்டத்தின் முதல் கட்டம் என்பது தெளிவாக தெரிகிறது.

கல்வி துறை , சுகாதார சிற்றூழியர்கள் மட்டும் இன்றி – குறிப்பாக மின்துறை, பெட்ரோலிய கூட்டுத்தாபனம் போன்ற அரச நிறுவனங்களில் பெரும் வேலை நீக்கங்கள் காத்திருக்கின்றன. 2017 ஆம் ஆண்டு சுமார் 1.49 மில்லியனாக இருந்த அரச ஊழியர்கள் 2021 இல் 2 மில்லியனயாக அதிகரித்தது -இதில் பெரும் எண்ணிக்கை அரசியல் காரணங்களுக்காக வழங்கப்பட்ட நியமனங்கள்.

பாதுகாப்பு செலவீனங்களை குறைத்து -ராணுவத்தின் எண்ணிக்கையை குறைக்குமாறு கோரப்பட்டால் மொத்த பேச்சுவார்த்தையும் தரை மட்டம் ஆகும்ம் வாய்ப்பு கூட இருக்குறது. -ராணுவ செலவீனத்தில் கைவைக்க கோத்தபாய விரும்பப் போவதில்லை. இந்திய கடனுதவி முடிவுக்கு வரும் நிலையில் இலங்கை அரசாங்கத்துக்கு அடுத்து வரும் மாதங்களை கொண்டு நடத்த கடைசியாக ஒரு வழி மட்டுமே மீதமுள்ளது.

ஆசிய அபிவிருத்தி வங்கி -உலகவங்கி ஆகிய அமைப்புக்கள் ஏற்கனவே இலங்கையில் அனுமதித்த அபிவிருத்தி திட்டங்களுக்காக வழங்கப்பட்ட சுமார் 1100 மில்லியன் டாலர் நிதி இலங்கையின் கைவசம் இருக்கிறது. இந்த நிதி சட்ட ரீதியில் குறிப்பிட்ட அபிவிருத்தி திட்டங்களுக்கு அல்லாமல் அத்தியாவசிய தேவைகளுக்கு பயன்படுத்த முடியாது. ஆனால் இந்த நெருக்கடியை கருத்தில் கொண்டு சில கொள்கை ரீதியிலான தளர்வுகளை மேற்கொள்ள இந்த இரண்டு வங்கிகளும் உடன்பாடு தெரிவிக்கலாம் என்று நம்பப்படுகிறது .

ரணில் விக்ரமசிங்கவின் கோரிக்கைக்கு சாதகமான பதில் கிடைத்துள்ளதாக தெரியவருகிறது. ஆனாலும் இந்த பணத்தை எரிபொருள் இறக்குமதிக்கு பயன்படுத்த முடியாது என்று திட்டவட்டமாக கூறப்பட்டுள்ள நிலையில், மருந்து மற்றும் உணவுக்காக அது பயன்படலாம்.

IMF ன் நேரடி நிதி உதவி கிடைக்க நீண்ட காலம் எடுக்கலாம். சீனா ஏற்கனவே தனது கடனை IMF திட்டத்தின் கீழ் மீளமைப்பதை கடுமையாக எதிர்க்கும் நிலையில் இலங்கையின் கடன் மறு சீரமைப்பு என்பது கண்ணுக்கு எட்டிய தூரத்தில் இல்லை. இலங்கையை விட சிக்கல் குறைந்த ஒரு கடன் மறுசீரமைப்பை அன்மையில் ஆபிரிக்க நாடான கம்பியா மேற்கொண்டது. ஆனால் அதற்கு 2 ஆண்டுகள் பிடித்தது.

இந்த பேச்சு வார்த்தைகள் முடியும் போது உணவுக்கு வழியில்லாத கடுமையான ஏழைகள் என்று ஒரு பகுதியும், அரசியலோடும் பெரும் முதலாளித்துவ வர்த்தகத்தோடும் தொடர்பு கொண்ட ஒரு பணக்கார சமூகமுமாக, இலங்கை தெளிவான இரண்டு கோடுகளால் பிரிக்கப்பட்டிருக்கும் -நடுத்தர வர்க்கம் என்ற ஒன்று இருக்காது- பொதுவாகவே இப்படியான எல்லையற்ற ஊழல் -கடன் மற்றும் மூலதன சுரண்டல்களின் முடிவு அப்படிதான் அமையும் என்பதை வரலாறு திரும்ப திரும்ப சொல்கிறது.

Latest news

இணையத்தைப் பயன்படுத்தும் குழந்தைகள் குறித்து காவல்துறை சிறப்பு அறிக்கை

ஆன்லைன் பாலியல் வன்கொடுமை வழக்கு தொடர்பாக நியூ சவுத் வேல்ஸ் காவல்துறை 15 பேரை கைது செய்துள்ளது. நியூ சவுத் வேல்ஸ் காவல்துறையினரால் நடத்தப்பட்ட பாதுகாப்பு நடவடிக்கையின்...

2026 ஆம் ஆண்டிலிருந்து விக்டோரியர்களுக்கு எளிதாகும் பொதுப் போக்குவரத்து

2026 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் விக்டோரியாவில் உள்ள அனைத்து streaming ஊடகங்களிலும் tap and go தொழில்நுட்பத்தை செயல்படுத்தப்போவதாக அரசாங்கம் கூறுகிறது. அதன்படி, ரயில் மற்றும் பேருந்து...

240 மில்லியன் டாலர் அபராதம் செலுத்தவுள்ள ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய வங்கி

ஆஸ்திரேலியாவின் முக்கிய வங்கிகளில் ஒன்றான ANZ வங்கி, பல வருட மோசடிக்காக விதிக்கப்பட்ட $240 மில்லியன் அபராதத்தை செலுத்த ஒப்புக்கொண்டுள்ளது. நான்கு தனித்தனி நடவடிக்கைகள் தொடர்பாக ANZ...

ஆஸ்திரேலியா முழுவதும் பாலியல் ரீதியாக பரவும் நோய்கள் பற்றி எச்சரிக்கை

சமீபத்திய தரவுகளின்படி, கடந்த பத்தாண்டுகளில் ஆஸ்திரேலியாவில் syphilis மற்றும் gonorrhea நோயாளிகளின் எண்ணிக்கை இரு மடங்காக அதிகரித்துள்ளது. NSW பல்கலைக்கழகத்தில் உள்ள கிர்பி நிறுவனம் வெளியிட்ட தகவலின்படி,...

மெல்பேர்ணில் மணிக்கு 225km வேகத்தில் சென்ற மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்

நேற்று காலை மெல்பேர்ணில் மணிக்கு 225 கிலோமீட்டர் வேகத்தில் சென்ற மோட்டார் சைக்கிள் ஒன்றை போலீசார் பறிமுதல் செய்தனர். மோட்டார் சைக்கிள் ஓட்டுநரின் உரிமத்தை போலீசார் பறிமுதல்...

ஆஸ்திரேலியா முழுவதும் பாலியல் ரீதியாக பரவும் நோய்கள் பற்றி எச்சரிக்கை

சமீபத்திய தரவுகளின்படி, கடந்த பத்தாண்டுகளில் ஆஸ்திரேலியாவில் syphilis மற்றும் gonorrhea நோயாளிகளின் எண்ணிக்கை இரு மடங்காக அதிகரித்துள்ளது. NSW பல்கலைக்கழகத்தில் உள்ள கிர்பி நிறுவனம் வெளியிட்ட தகவலின்படி,...