Cinema சிம்புவை துரத்தி துரத்தி காதல் பண்ணும் தொலைக்காட்சி தொடர் நடிகை

சிம்புவை துரத்தி துரத்தி காதல் பண்ணும் தொலைக்காட்சி தொடர் நடிகை

-

பிரபல தமிழ் டிவி தொலைக்காட்சி தொடர் நடிகையான ஸ்ரீநிதி சுதர்சன், விஜய் டிவியில் 7 சி என்ற தொடர் மூலம் அறிமுகமானவர். யாரடி நீ மோகினி, புதுப்புது அர்த்தங்கள் உள்ளிட்ட பல தொடர்களில் நடித்து பிரபலமானார். சமீபத்தில் அஜித் நடிப்பில் வெளியான வலிமை படம் பற்றி மோசமான விமர்சனத்தை கூறி பரபரப்பை கிளப்பினார். இதனால் கோபமடைந்த நடிகர் அஜித்தின் ரசிகர்கள், சமூக வலைதளங்களில் ஸ்ரீநிதியை கண்டபடி திட்டி தீர்த்தனர்.

இதைத் தொடர்ந்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ஒருநாள் அனைவருக்கும் திருமணம் ஆகி இருக்கும். அப்போது நானும் சிம்புவும் தான் திருமணம் ஆகாமல் மீதம் இருப்போம் என கருத்து பதிவிட்டிருந்தார். இதை பார்த்த சமூக வலைதள பயன்பாட்டாளர் ஒருவர், நீங்கள் இருவரும் இணைந்து ஏன் திருமணம் செய்து கொள்ள கூடாது என கேட்டார். அதற்கு ஸ்ரீநிதியும், சிம்புவை திருமணம் செய்து கொள்ள தான் தயாராக உள்ளதாக வெளிப்படையாக பதிலளித்தார்.

இதற்கு பிறகு சிலம்பரசன் தன்னை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என கூறி பரபரப்பை கிளப்பி வந்தார். அதோடு, தனக்கு சிம்பு தான் வேண்டும். அவரை தன்னுடன் சேர்த்து வையுங்கள் என கேட்டு நள்ளிரவு நேரத்தில் சிம்புவின் வீடு முன் அமர்ந்து போராட்டம் நடத்தி உள்ளார். பிறகு அங்கிருந்தவர்கள் ஸ்ரீநிதியிடம் ஒரு வழியாக பேசி, சமாதானம் செய்து, அவரை வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளனர்.

அதோடு விடாமல் தற்போது, சிம்புவுடன் ஒன்றாக இருப்பது போன்ற புகைப்படம் ஒன்றை சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ள ஸ்ரீநிதி, தன்னை காதலிக்கும் படி வற்புறுத்தி சிம்பு தொடர்ந்து தன்னை தொல்லை செய்து வருவதாகவும், சிம்பு தனக்கு எழுதிய காதல் கடிதம் என ஒரு கடிதத்தின் புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார். இதற்கு மேலும் பொறுக்க முடியாது. சிம்பு உடனடியாக தன்னை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என கேட்டு வருகிறார் ஸ்ரீநிதி.

ஆனால் ஸ்ரீநிதி கூறி வரும் இந்த காதல் குற்றச்சாட்டுக்கள் குறித்து நடிகர் சிலம்பரசன் மற்றும் அவரது குடும்பத்தினர் சார்பில் எந்த மறுப்போ அல்லது விளக்கமோ இதுவரை தரவில்லை. இதனால் இந்த காதல் விவகாரம் உண்மையாக இருக்குமோ என வதந்திகள் பரவி வருகின்றன.

Latest news

அதிகரிக்கப்படும் ஓய்வு பெற்றவர்களை மீண்டும் பணியில் அமர்த்துவதற்கான கொடுப்பனவு மற்றும் பணிக்கான போனஸ் இருப்பு தொகை

ஆஸ்திரேலியாவில் வேலைவாய்ப்பு தொடர்பான பல திருத்தங்களை மத்திய அரசு அறிவித்துள்ளது. இதன்படி, பணியாளர்களை விரிவுபடுத்தும் நோக்கில், தற்போது ஓய்வு...

சட்டவிரோத மின்-சிகரெட்டுகளை கட்டுப்படுத்த NSW முடிவு

சட்டவிரோத எலக்ட்ரானிக் சிகரெட் விற்பனை மற்றும் பயன்பாட்டை கட்டுப்படுத்தும் வகையில் சட்டங்களை கடுமையாக்க நியூ சவுத் வேல்ஸ் முடிவு செய்துள்ளது.

மெல்போர்னின் வடக்கே பல பகுதிகளில் லேசான நடுக்கம்

மெல்போர்னின் பல வடக்குப் பகுதிகளில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. மெல்போர்ன் சிபிடியில் இருந்து சுமார் 20 கிலோமீட்டர் தொலைவில்...

வாக்கெடுப்பில் “YES” முகாமுக்கான ஆதரவு சதவீதம் மேலும் குறைந்துள்ளது

சுதேசி ஹடா வாக்கெடுப்பில், YES முகாமுக்கான ஆதரவு சதவீதம் மேலும் குறைந்துள்ளது. நியூஸ்போல் நடத்திய சமீபத்திய கருத்துக் கணிப்பில்,...

வடக்கு மாகாண முதலமைச்சரை தாக்கியதாக பெண் மீது குற்றம்

வடமாகாண முதலமைச்சர் நடாஷா ஃபைல்ஸ் தாக்கப்பட்டமை தொடர்பில் பெண் ஒருவருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 56 வயதுடைய...

உலகக் கோப்பை ரக்பியில் இருந்து வெளியேறிய ஆஸ்திரேலியா

ரக்பி உலகக் கோப்பையில் இருந்து ஆஸ்திரேலியா விலக வேண்டியதாயிற்று. அது வேல்ஸ் அணிக்கு எதிரான தோல்வியுடன்.