10 நாயகிகள் கலந்து கொள்ளும் தி லெஜண்ட் ஆடியோ வெளியீட்டு விழா

0
281

பிரபல தொழிலதிபரான சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர் சரவணன் நாயகனாக அறிமுகமாகும் படம் தி லெஜண்ட். இந்த படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய 5 மொழிகளில் விரைவில் வெளியாக உள்ளது. இந்த படத்தின் 2 பாடல்கள் இதுவரை வெளியிடப்படடு, ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. யூட்யூப்பில் கோடிக்கும் அதிகமான பார்வைகளை பெற்றுள்ளது.

பல கோடி செலவில் பிரம்மாண்டமாய் தயாராகி வரும் தி லெஜண்ட் படத்தின் இசை வெளியீட்டு விழா மே 29 ம் தேதி நடக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விழாவில் படத்தின் பாடல் மற்றும் முன்னோட்டம் வெளியிடப்பட உள்ளது. இந்த விழாவில் பிரபல சினிமா கதாநாயகிகள் 10 பேர் கலந்து கொள்ள உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமன்னா, ஹன்சிகா, பூஜா ஹெக்டே, ஊர்வசி ராவ்டேலா, ராய் லட்சுமி, யாஷிகா உள்ளிட்ட 10 நாயகிகள் கலந்து கொள்ள போகிறார்கள். இவர்கள் அனைவரும் ஒரே மேடையில் சரவணன் கூட ஆட்டம் போட உள்ளதாக கூறப்படுகிறது.

சயின்ஸ் பிக்சிங் படமாக தி லெஜண்ட் படம் உருவாக்கப்பட்டுள்ளது. மறைந்த பிரபல நகைச்சுவை நடிகர் விவேக் நடித்த கடைசி படம் இது என்பதாலும், சரவணன் நாயகனாக அறிமுகமாக உள்ள படம் என்பதாலும் இந்த படத்தின் மீது ரசிகர்களுக்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.