குரங்கு அம்மையால் அதிகம் பாதிக்கப்படுபவர்கள் சிறுவர்களே…

0
314

குரங்கு அம்மை நோயால் சிறுவர்களே அதிகம் பாதிக்கப்படுனதாக இந்திய மருத்துவ ஆய்வு கழகம் தெரிவித்துள்ளது. நோய் பாதிக்கப்பட்ட நாடுகளில் இருந்து வந்தவர்களிடம் அசாதாரண அறிகுறிகள் காணப்பட்டால் அவர்களுக்கு மருத்துவ பரிசோதனை நடத்த வேண்டும் என்றும் மருத்துவ ஆய்வு கழகம் அறிவுறுத்தி உள்ளது.

இந்திய மருத்துவ ஆய்வு கழக விஞ்ஞானி அபர்ணா முகர்ஜி கூறுகையில், குரங்கு அம்பை பாதிப்பை எதிர்கொள்ள இந்தியா தயாராக உள்ளது. யாரும் அச்சம் கொள்ள தேவையில்லை. அமெரிக்கா, ஐரோப்பா போன்ற நாடுகளைப் போல் இதுவரை இந்தியாவில் யாரும் குரங்கு அம்மை நோயால் பாதிக்கப்படவில்லை என தெரிவித்துள்ளார்.

உலகின் பல நாடுகளிலும் குரங்கு அம்மை நோய் கண்டறியப்பட்டு வருகிறது. 20 நாடுகளைச் சேர்ந்த 200 க்கும் அதிகமானவர்கள் குரங்கு அம்மை பாதிக்கப்பட்டுள்ளதாக உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது. அதே சமயம் இந்த நோய் கட்டுப்படுத்தக் கூடியது தான் என தெரிவித்துள்ளது. குரங்கு அம்பை நோயால் பாதிக்கப்பட்ட நாடுகளுக்கு சென்று திரும்பியவர்களுக்கு தீவிர மருத்துவ பரிசோதனை நடத்தப்பட வேண்டும் என இந்திய மருத்துவ கழகம் தெரிவித்துள்ளது.

அதிகப்படியான காய்ச்சல், நிணநீர் அலட்சி, பெரிய கொப்புளங்கள், உடல் அரிப்பு, உடல் வலி போன்றவைகள் குரங்கு அம்மையின் அறிகுறிகளாக சொல்லப்படுகிறது. இது போன்ற அறிகுறிகள் உள்ளவர்கள் உடனடியாக தங்களை பரிசோதனை செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.