நயன்தாரா – விக்னேஷ் சிவன் திருமணத்தில் நடந்த திடீர் மாற்றம்

0
98

நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவரின் திருமணம் ஜுன் 9 ம் தேதி திருப்பதியில் நடைபெற உள்ளதாக சமீபத்தில் தெரிவிக்கப்பட்டது. இதற்காக சமீபத்தில் நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் குல தெய்வம் கோயிலுக்கு சென்று பொங்கல் வைத்து வழிபாடு நடத்தினர். இந்நிலையில் அவர்களின் திருமண அழைப்பிதழ் இணையத்தில் கசிந்துள்ளது.

அந்த அழைப்பிதழில் நயன்தாரா – விக்னேஷ் சிவனின் திருமணம் ஜுன் 9 ம் தேதி சென்னை அருகே மகாபலிபுரத்தில் நடக்க உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. திருப்பதியில் நடக்கும் என சொல்லப்பட்ட நிலையில் திடீரென ஏன் இடத்தை மாற்றி உள்ளார்கள் என தெரியவில்லை. திருமணம் காரணமாக தான் தமிழகம் உள்ளிட்ட பல ஊர்களிலும் உள்ள கோயில்களுக்கு சென்று இருவரும் வழிபாடு நடத்தியதாக கூறப்படுகிறது.

நயன்தாரா – விக்னேஷ் சிவன் திருமண விழாவில் தென்னிந்திய சினிமா துறையின் முக்கிய நட்சத்திரங்கள் பலரும் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இவர்களின் திருமண நாளிதழை ரசிகர்கள் அதிகம் பகிர்ந்து வருகின்றனர்.