இந்தியாவில் பிரபல வாடகை கார், இருசக்கர வாகன தொழில் நடத்தி நடத்தி வருகிறது ஓலா நிறுவனம். இந்த நிறுவனம், 10,000 கோடி இந்திய ரூபாய் மதிப்பில் மின்சார கார், பேட்டரி தொழிற்சாலைகளை அமைக்க திட்டமிட்டுள்ளது. இதற்காக ஆயிரம் ஏக்கரில் நிலம் வேண்டும் என தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறது.
எந்த மாநிலத்தில் ஓலா தனது தொழிற்சாலையை அமைக்க உள்ளது என்பது அடுத்த மாதத்தில் இறுதி செய்யப்படும் என கூறப்படுகிறது. இருந்தாலும் 1000 ஏக்கரில் தொழிற்சாலை என்பது அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது.
சமீபத்தில் தான், தங்களிடம் வாங்கிய மின்சார ஸ்கூட்டர்களை 24 மணி நேரத்தில் வாடிக்கையாளர்களுக்கு டெலிவரி செய்யும் பணிகளை ஓலா எலக்ட்ரிக் நிறுவனம் தொடங்கியது. தமிழகத்தில் அடுத்தடுத்து பல திட்டங்களை ஓலா நிறுவனம் செயல்படுத்தி வருவதால், இந்த 1000 ஏக்கர் தொழிற்சாலையும் தமிழகத்திலேயே தொடங்கப்பட அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.