100 கோடி செலவு…வெறும் 20 டிக்கெட் மட்டுமே விற்பனையான படம்

0
144

இந்தி மொழியில் 100 இந்திய ரூபாய் செலவு செய்யப்பட்டு தாக்கட் என்ற படத்தை இயக்கினர். நடிகை கங்கனா ரணாவத், அதிரடி சண்டை காட்சிகளில் நடித்த இந்த படம் மே 20 ம் தேதி வெளியிடப்பட்டது. இந்த படம் வெளியானது முதல் மிக மோசமான விமர்சனங்களை சந்தித்து வருகிறது.

வெளியான 8 நாட்களில் 3 கோடி ரூபாய் மட்டுமே வருமானமாக பெற்றுள்ளது. அதிலும் எட்டாவது நாளில் இந்தியா முழுவதிலும் இந்த படத்திற்கு வெறும் 20 டிக்கெட்கள் மட்டுமே வீற்பனையானது. ஒரு நாளில் சராசரியாக 4420 ரூபாயிக்கு மட்டுமே டிக்கெட் விற்பனை நடைபெற்றுள்ளது. இதனால் படத்தின் தயாரிப்பாளருக்கு மிகுந்த நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

இந்த படம் திரையிடப்பட்ட பெரும்பாலான தியேட்டர்கள் படம் பார்ப்பதற்கு கூட ஆளில்லாமல் வெறுமையாக காணப்படுகின்றன. இதுவரை வெளியான படங்களிலேயே இந்த அளவிற்கு மோசமான விமர்சனத்தையும், வருமானத்தையும் வேறு எந்த இந்திய படமும் பெற்றதில்லை என்ற பெயரை இந்த படம் பெற்றுள்ளது.

இந்தி, தமிழ் என பல மொழி சினிமாக்களில் நடித்து, பிரபலமான நடிகையாக இருக்கும் கங்கனா ரணாவத் இது போன்ற படங்களில் எப்படி நடித்தார் என விமர்சர்கள் கேட்டு வருகின்றனர். இவரின் படங்களை பார்ப்பதை ரசிகர்கள் தவிர்த்து வருவதாக கூறப்படுகிறது. இந்த அளவிற்கு மோசமான வருமானத்தை பெற்றதால் தயாரிப்பாளர் வருத்தத்தில் உள்ளனர்.