கேரளாவில் புதிதாக பரவும் நைல் காய்ச்சல்…ஒருவர் உயிரிழந்ததால் மக்கள் அச்சம்

0
425

இந்தியாவில் கடவுளின் தேசம் என அழைக்கப்படும் கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டத்தில் நைல் என்ற புதிய வகை காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இந்த காய்ச்சலால் பாதிக்கப்பட்ட ஒருவர் உயிரிழந்து இருப்பதால் மக்கள் மிகுந்த அச்சம் அடைந்துள்ளனர். இதனால் மாநில சுகாதாரத்துறை உஷார்படுத்தப்பட்டுள்ளது.

மேற்கு நைல் எனப்படும் இந்த காய்ச்சல் க்யூலெக்ஸ் வகை கொசுக்களால் பரவி வருவது கண்டறியப்பட்டுள்ளது. இதனால் நோய் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. உயிரிழந்தவர் வசித்த பகுதியில் உள்ள மக்களிடம் இருந்து ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. மேற்கு நைல் காய்ச்சலை கட்டுப்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதால் பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை என சுகாதாரத்துறை கேட்டுக் கொண்டுள்ளது.

கொசுக்களை அழிப்பதற்கு முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும். பொதுமக்கள் தங்கள் வீடுகள் மற்றும் சுற்றுப்புறங்களை சுத்தமாக வைத்திருக்க வேண்டும். தண்ணீர் தேங்கி நிற்கக்ண கூடாது. காய்ச்சல் அல்லது நோயின் பிற அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவமனைக்கு சென்று பரிசோதனை செய்து கொள்ளும் படி அரசு தரப்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Previous articleஉயிருக்கு ஆபத்தான நிலையில் நித்தியானந்தா
Next articleஉக்ரைனில் படித்த இந்திய மாணவர்கள் ஹங்கேரியில் படிப்பை தொடர நடவடிக்கை