Melbourneஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய சூதாட்ட நிறுவனத்துக்கு 80 மில்லியன் டொலர் அபராதம்

ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய சூதாட்ட நிறுவனத்துக்கு 80 மில்லியன் டொலர் அபராதம்

-

ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய சூதாட்ட நிறுவனமான Crown Resortsக்கு 80 மில்லியன் ஆஸ்திரேலிய டொலர் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

விக்டோரியாவின் சூதாட்ட, சூதாட்டத்தளக் கட்டுப்பாட்டு ஆணையம் Crown மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்ற மாதம் தெரிவித்திருந்தது.

2012க்கும் 2016க்கும் இடைப்பட்ட காலத்தில் Crownக்கும் சீனாவுக்கும் இடையில் சட்டவிரோதமான பணமாற்றம் இடம்பெற்றதாக ஆணையம் குறிப்பிட்டது.

அதன்மூலம் சுமார் 164 ஆஸ்திரேலிய டாலர் வாடிக்கையாளர்களுக்குச் சென்றது. அதிலிருந்து 32 மில்லியனுக்கும் மேற்பட்ட ஆஸ்திரேலிய டாலரை Crown பெற்றதாக ஆணையம் குறிப்பிட்டது.

அதன் குறைபாடுகளை Crown ஒப்புக்கொண்டது. சென்ற ஆண்டு அக்டோபர் மாதத்தில் Crown அதன் மெல்பர்ன் சூதாட்ட உரிமத்தை இழந்தது. இருப்பினும் அது ஆக அதிகமான பணத்தை ஈட்டும் அதன் சூதாட்டத்தளத்தைக் கண்காணிப்பின்கீழ் நடத்த அனுமதிக்கப்பட்டது.

Latest news

புற்றுநோய் பற்றி ஆஸ்திரேலிய விஞ்ஞானிகளின் சமீபத்திய கண்டுபிடிப்பு

ஆஸ்திரேலிய விஞ்ஞானிகள் குழு புற்றுநோய்க்கான மற்றொரு காரணத்தை கண்டுபிடித்துள்ளனர். (Circular RNA) Circular RN Flinders University ஆராய்ச்சியாளர்கள், நமது உடலில் உள்ள ஒரு சிறிய உறுப்பு...

விக்டோரியாவில் திறந்தவெளியில் தீ வைக்க தடை

விக்டோரியா மாநிலத்தின் ஐந்து பகுதிகளில் இன்று திறந்தவெளியில் தீ வைப்பதற்கு முழுத் தடை விதிக்கப்பட்டுள்ளது. விக்டோரியாவின் பல பகுதிகளில் வெப்பநிலை இன்று 40 டிகிரி செல்சியஸுக்கு மேல்...

ஆஸ்திரேலியாவில் மூடும் அபாயத்தில் உள்ள பிரபல Fashion Brand

ஆஸ்திரேலியாவில் பிரபல Fashion பிராண்டான Rivers, நஷ்டத்தால் சரியத் தொடங்கியுள்ளது. அதன்படி, ஆஸ்திரேலியா முழுவதும் உள்ள 130க்கும் மேற்பட்ட Rivers கடைகள் மூடப்பட்டு சுமார் 650 பேர்...

TikTok சமூக ஊடக வலையமைப்பை வாங்க எலோன் மஸ்க் முயற்சி

TikTok சமூக ஊடக வலையமைப்பை வாங்க டெஸ்லா உரிமையாளர் எலோன் மஸ்க் முயற்சித்துள்ளார். மிஸ்டர் பீஸ்ட் என்று அழைக்கப்படும் ஜிம் டோனல்சன் மற்றும் ஆரக்கிள் நிறுவனத்தின் தலைவர்...

வரவு செலவுத் திட்டம் அறிவிக்கப்படும் திகதிகள் தொடர்பில் வெளியான தகவல்

எதிர்வரும் அவுஸ்திரேலிய கூட்டாட்சி வரவு செலவுத் திட்டம் அறிவிக்கப்படும் திகதிகள் தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது. அதன்படி மார்ச் 25ம் திகதி அறிவிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. இது தொடர்பில்...

கிறீன்லாந்தை கையகப்படுத்த திட்டமிடும் ட்ரம்ப்

கிறீன்லாந்து தீவு விற்பனைக்கு அல்ல என அமெரிக்க ஜனாதிபதியிடம் திட்டவட்டமாக தெரிவித்துவிட்டார் டென்மார்க் பிரதமர் மெட்டே ஃப்ரெடெரிக்சென். டென்மார்க்கின் ஓர் அங்கமாக தன்னாட்சி பெற்ற பிராந்தியமாகத் திகழும்...