பிரதான எதிர்க்கட்சி தலைவர் சோனியா காந்திக்கு கொரோனா தொற்று உறுதி

0
391

இந்தியாவின் பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்திக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து அவர் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். அவருக்கு தொடர்ந்து மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

பல மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகளை தேர்வு செய்வதற்கான உட்கட்சி தேர்தல் விரைவில் நடத்தப்பட உள்ளது. அதோடு மாநிலங்களவை தேர்தல், ஜனாதிபதி தேர்தல் ஆகியன அடுத்தடுத்து நடைபெற உள்ளன. இதற்காக கடந்த சில நாட்களாக காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகளை சந்தித்து உரையாடி வந்தார் சோனியா காந்தி. இந்நிலையில் நேற்று அவருக்கு லேசான காய்ச்சல் ஏற்பட்டது. இதையடுத்து அவருக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து வீட்டில் தன்னை தனிமைப்படுத்திக் கொண்ட சோனியா காந்திக்கு மருத்துவ சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. கொரோனா தொற்றில் இருந்து சோனியா காந்தி விரைவில் குணமடைய பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட தலைவர்கள் சோனியா காந்திக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Previous articleஇலங்கையில் அனைத்து அரசாங்க அலுவலகங்களும் வாரத்தில் 4 நாட்கள் மட்டுமே இயங்கும்!
Next articleநடிகை பூஜா ஹெக்டே அணிந்து வந்த புடவையின் விலை…வாயடைத்து போன ரசிகர்கள்