Newsஅமெரிக்கா - ரஷ்யா இடையே போர் மூளும் அபாயம் - ஜெர்மனி...

அமெரிக்கா – ரஷ்யா இடையே போர் மூளும் அபாயம் – ஜெர்மனி வழங்கவுள்ள ஆபத்தான ஆயுதம்

-

உக்ரைன் தன்னை தானே தற்காத்துக் கொள்ள உதவும் வகையில் நவீன உந்துகணை கட்டமைப்புக்களை அமெரிக்கா அனுப்பும் என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அறிவித்துள்ளார்.

எனினும் அமெரிக்காவின் இந்தத் தீர்மானத்தை விமர்சித்துள்ள ரஷ்யா, இது இரண்டு நாடுகளுக்கு இடையிலான நேரடி மோதலுக்கான அபாயத்தை அதிகரிக்கும் என எச்சரித்துள்ளது.

நீண்ட தூரத்தில் இருந்து எதிரிப்படையை துல்லியமாக தாக்கும் திறன் கொண்ட நீண்ட தூர உந்துகணைகளை அமெரிக்காவிடம் உக்ரைன் கோரியிருந்தது.

எனினும் ரஷ்யாவில் உள்ள இலக்குகள் மீது தாக்குதல் மேற்கொள்ளப்படலாம் எனும் அச்சம் காரணமாக அந்தக் கோரிக்கையை அமெரிக்கா நீண்டகாலமாக நிராகரித்துவந்திருந்தது.

இந்த நிலையில் மிகவும் நவீனமான உந்துகணை கட்டமைப்புக்களை உக்ரைனுக்கு வழங்கப் போவதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் நேற்று அறிவித்துள்ளார்.

இதன்மூலம் உக்ரைனின் பேரம் பேசும் திறன் அதிகரிக்கும் என்பதுடன், இராஜதந்திர ரீதியான தீர்வுக்கான வழியை ஏற்படுத்தும் எனவும் அவர் கூறியுள்ளார்.

எனினும் இந்த ஆயுத விநியோகம் நேரடியாகவும் திட்டமிட்ட வகையிலும் எரியும் தீயில் எண்ணெய் ஊற்றும் செயற்பாடு என ரஷ்ய அதிபர் கண்டனம் வெளியிட்டுள்ளார்.

இதனிடையே நவீன விமான எதிர்ப்பு ஏவுகணை மற்றும் ராடர் கண்காணிப்பு கட்டமைப்பு ஆகியவற்றை உக்ரைனுக்கு விநியோகிக்க போவதாக ஜேர்மன் சான்ஷிலர் ஓலாப் ஸ்சொட்ஸ் தெரிவித்துள்ளார்.

கனரக ஆயுதங்களை வழங்க வேண்டும் என உக்ரைன் அதிபர் வெலெடிமீர் ஷெலென்ஸ்கி மற்றும் ஜேர்மனியின் எதிர்கட்சியினர் விடுத்த கோரிக்கையை அடுத்து ஜேர்மன் சான்ஷிலர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

புதிய நவீன ஏவுகணையானது ஏனைய நேட்டோ நாடுகளுடன் இணைந்து ஜேர்மன் தயாரித்த ஒன்றென்பதுடன், புதிய ராடர் கட்டமைப்பு மூலம் எதிரிகளின் எறிகணை கட்டமைப்புக்களை அடையாளம் காண முடியும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Latest news

உக்ரைனுக்கு 15 ஆண்டு பாதுகாப்பு உத்தரவாதத்தை வழங்கினார் டொனால்ட் டிரம்ப்

உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி, முன்மொழியப்பட்ட அமைதித் திட்டத்தின் ஒரு பகுதியாக உக்ரைனுக்கு 15 ஆண்டு பாதுகாப்பு உத்தரவாதத்தை வழங்க அமெரிக்கா ஒப்புக்கொண்டுள்ளதாகக் கூறுகிறார். இருப்பினும், ரஷ்ய...

குழந்தைகளின் பாதுகாப்பிற்கு சவால் விடும் AI Chatbots

16 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கான சமூக ஊடகங்களைத் தடுத்த பிறகு, ஆஸ்திரேலியா AI Chatbotகளுடன் தொடர்புடைய பாதுகாப்பு அபாயத்தை எதிர்கொண்டுள்ளது. குழந்தைகள் தொழில்நுட்பத்தை அதிகமாக நம்பியிருப்பதும், AI-க்கு ஆளாவதும்...

துருக்கியில் புத்தாண்டில் தாக்குதலுக்கு திட்டம்

இஸ்லாமிய அரச குழுவிற்கு எதிராக நேற்று (30) துருக்கி முழுவதும் தீவிர தேடுதல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. இஸ்தான்புல், அங்காரா மற்றும் யலோவா உட்பட 21 மாகாணங்களில் பொலிஸார்...

ஆஸ்திரேலியாவில் உள்ள பல்பொருள் அங்காடிகளில் வரப்போகும் மாற்றம்

ஆஸ்திரேலிய பல்பொருள் அங்காடிகளுக்குள் நுழையும் வாடிக்கையாளர்கள் அடுத்த ஆண்டு முதல் ஒரு பெரிய மாற்றத்தின் தொடக்கத்தைக் காண்பார்கள். அதன்படி, பல்பொருள் அங்காடிகளில் உள்ள தயாரிப்பு பேக்கேஜிங்கில் பாரம்பரிய...

Bondi துப்பாக்கிச் சூடு நடத்தியது ISIS தாக்குதலா?

ஆஸ்திரேலியாவில் நடந்த Bondi கடற்கரை பயங்கரவாதத் தாக்குதல் குறித்து உரையாற்ற பிரதமர் அந்தோணி அல்பானீஸ் மற்றும் மத்திய காவல்துறை ஆணையர் உட்பட பல தலைவர்கள் பங்கேற்ற...

ஆஸ்திரேலியாவில் உள்ள பல்பொருள் அங்காடிகளில் வரப்போகும் மாற்றம்

ஆஸ்திரேலிய பல்பொருள் அங்காடிகளுக்குள் நுழையும் வாடிக்கையாளர்கள் அடுத்த ஆண்டு முதல் ஒரு பெரிய மாற்றத்தின் தொடக்கத்தைக் காண்பார்கள். அதன்படி, பல்பொருள் அங்காடிகளில் உள்ள தயாரிப்பு பேக்கேஜிங்கில் பாரம்பரிய...