News துடிதுடிக்க உயிரைக் கொல்லும் கொடூர விஷத்தை பயன்படுத்திய ரஷ்யா? அதிர்ச்சி தகவல்

துடிதுடிக்க உயிரைக் கொல்லும் கொடூர விஷத்தை பயன்படுத்திய ரஷ்யா? அதிர்ச்சி தகவல்

-

துடிதுடிக்க உயிரைக் கொல்லும் உலகின் மிக கொடூரமான விஷம் குறித்து இரசாயன நிபுணர் டாக்டர் நீல் பிராட்பரி திடுக்கிடும் தகவல்களை வெளியிட்டுள்ளார். தனது வாழ்க்கையில் தான் ஆராய்ச்சி செய்ததில், மிகவும் பயங்கரமான துடிதுடிக்க உயிரைக் கொல்லும் விஷங்களில் ஒன்று ‘ஸ்டிரைக்கின்’ (Strychnine) என்று அவர் விவரித்தார். இப்படிப்பட்ட கொடூரமான் விஷத்தை ரஷ்யா பயன்படுத்த்தியதாகக் கூறப்படுகிறது.

உலகின் மிக ஆபத்தான கொடிய விஷமான இது உடலில் புகுந்தால், லும்பிலிருந்து சதையை பிய்த்து எடுக்கும். அப்போது விஷம் எடுத்துக் கொண்ட நபர் நீண்ட நெடு நேரம் வலியினால் துடிதுடித்து இறந்து போவார். இந்த விஷத்திற்கு ஸ்ட்ரைக்னைன் என்று பெயரிடப்பட்டுள்ளது. தூள் வடிவில் காணப்படும் இந்த விஷத்தை ரஷ்யா தனது எதிரிகளுக்கு பயன்படுத்துவதாக கூறப்படுகிறது

ரஷ்யா குறித்த தகவல்களை அம்பலப்படுத்திய அலெக்சாண்டர் பெரெபிலிச்னி, லண்டனில் ஸ்டிரைக்னைன் போன்ற இரசாயனப் பொருளால் இறந்து கிடந்தார் என்று ‘டெய்லி ஸ்டார்’ செய்தி வெளியிட்டுள்ளது. இருப்பினும், இதற்காக மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் ஸ்டிரைக்னைன் உட்கொண்டதற்கான உறுதியான ஆதாரங்கள் எதுவும் கிடைக்கவில்லை. மனித உடலில் அதன் பயங்கரமான விளைவு காரணமாக, இந்த தீவிர இரசாயனம் இங்கிலாந்தில் கடுமையாக தடைசெய்யப்பட்டுள்ளது.

விஷம் நிபுணர் டாக்டர் நீல் பிராட்பரி இது குறித்து கூறுகையில், ஒரு மோசமான விஷயம் என்னவென்றால், இது மிகவும் மெதுவாக செயல்படும் விஷம் இறக்க பல மணிநேரம் ஆகும். இது மிகவும் கொடுமையானது.

உங்கள் உடலில் உள்ள ஒவ்வொரு தசையும் ஒரே நேரத்தில் சுருங் கினால் எப்படி இருக்கும் . நினைத்து பார்க்கவே கொடூரமாக இருக்கிறது இல்லையா… உண்மையில் எலும்புகளிலிருந்து சதைகளை பிரிந்து செல்லும். உயிர் வேதியியல் மற்றும் மருத்துவ உயிர் வேதியியலில் பட்டம் பெற்ற டாக்டர் பிராட்பரி, இந்த விஷத்தை பற்றி ‘A Test for Poison: Eleven Deadly Substance and the Killer Who Used Them’ என்ற புத்தகத்தில் எழுதியுள்ளார்.

மனித உடலில் ஸ்ட்ரைக்னைனின் பயங்கரமான விளைவுகள் இருந்தபோதிலும், இது கடந்த காலத்தில் செயல்திறனை மேம்படுத்தும் மருந்தாகப் இது பயன்படுத்தப்பட்டது என்றும் கூறப்படுகிறது.

Latest news

சிட்னியில் கடும் வெள்ளம் – ஆயிரக்கணக்கானோரை வெளியேறும்படி உத்தரவு

ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் கடும் வெள்ளம் காரணமாக ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். அவர்களை...

மேற்கு ஆஸ்திரேலியாவில் குடியேற காத்திருப்பவர்களுக்கு வெளியான தகவல்

ஆஸ்திரேலியாவிலுள்ளவர்கள் மட்டுமல்லாமல், வெளிநாட்டிலுள்ளவர்களும் திறமை அடிப்படையில் மேற்கு ஆஸ்திரேலியாவிற்கு குடிபெயர வாயப்பு வழங்கப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலியாவில் இன்று திறக்கப்பட்ட Go Gota Go பல்பொருள் அங்காடி!

மெல்போர்ன் அம்புல உணவகச் சங்கிலியின் சமீபத்திய அறிமுகமான Go Gota Go பல்பொருள் அங்காடி இன்றைய தினம்...

ஆஸ்திரேலியாவில் அதிகரிக்கும் பணி வெற்றிடங்கள் – நெருக்கடியில் பல்வேறு துறையினர்

ஆஸ்திரேலியாவில் கடந்த மே மாதம் 480,000 பணி வெற்றிடங்கள் உள்ளதென புள்ளியியல் அலுவலகம் தெரிவித்துள்ளது.

ஆஸ்திரேலியாவில் அதிகரிக்கும் பணி வெற்றிடங்கள் – நெருக்கடியில் பல்வேறு துறையினர்

ஆஸ்திரேலியாவில் கடந்த மே மாதம் 480,000 பணி வெற்றிடங்கள் உள்ளதென புள்ளியியல் அலுவலகம் தெரிவித்துள்ளது.

40 மில்லியன் அமெரிக்க டொலரில் அபிவிருத்தி செய்யப்படும் காங்கேசன்துறை துறைமுகம்!

இலங்கைக்கு இந்தியாவினால் வழங்கப்படும் 40 மில்லியன் அமெரிக்க டொலர்களை பயன்படுத்தி காங்கேசன்துறை துறைமுகத்தின் அபிவிருத்தியைச் செய்ய எதிர்பார்த்துள்ளதாக...