Newsகனடாவை மர்ம வைரஸ்: 2 மில்லியன் பறவைகள் கருணைக்கொலை!

கனடாவை மர்ம வைரஸ்: 2 மில்லியன் பறவைகள் கருணைக்கொலை!

-

கனடாவின் கியூபெக் மாகாணத்தில், பறவைகளைத் தாக்கும் இன்ப்ளூயென்சா வைரஸால் ஆயிரக்கணக்கான பறவைகள் உயிரிழந்துள்ள நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கனடா முழுவதிலும் இரண்டு மில்லியன் பறவைகள் கருணைக்கொலை செய்யப்பட்டுள்ளன. கியூபெக் மாகாணத்தின் ஒரு பகுதியான Magdalen Islands என்னும் தீவில், ஏராளம் உயிரிழந்த பறவைகள் கரையோரமாக ஒதுங்கிக் கிடக்கின்றன.

அதற்குக் காரணம் H5N1 என்னும் பறவைகளைத் தாக்கும் இன்ப்ளூயென்சா வைரஸ் தொற்று.

இந்த H5N1 என்னும் பறவைகளைத் தாக்கும் இன்ப்ளூயென்சா வைரஸ் தொற்று, ஐரோப்பாவிலிருந்து புலம்பெயர்ந்து வந்த பறவைகள் மூலம் வட அமெரிக்காவுக்குள் நுழைந்திருக்கலாம் என்கிறார் கால்நடை மருத்துவ நிபுணரான பேராசிரியர் Stéphane Lair.

புதிதாக ஒரு வைரஸ் ஓரிடத்தில் நுழையும்போது, அங்கிருக்கும் கால்நடைகளுக்கு அந்த வைரஸுக்கெதிரான நோயெதிர்ப்பு சக்தி இருக்காது. ஆகவே, அந்த வைரஸ் மிக பயங்கரமாக பரவும் என்கிறார் அவர்.

ஆக, காட்டிலிருக்கும் பறவைகளைத் தொற்றும் அந்த வைரஸ், அந்தப் பறவைகள் மூலம் நாட்டுக்குள்ளிருக்கும் பறவைகளுக்குப் பரவும்.

அவை பரவுவதைத் தடுக்க ஒரே வழி, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பறவைகளைக் கொல்வதுதான்.

ஆகவேதான், கனடா முழுவதிலும், பண்ணைகளில் வளர்க்கப்படும் சுமார் இரண்டு மில்லியன் பறவைகள் கொல்லப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Latest news

14-மணிநேர Optus செயலிழப்பிற்கு பண இழப்பீடு வழங்க முடிவு

கடந்த நவம்பர் 8ஆம் திகதி சுமார் 14 மணி நேரத்துக்கும் மேலாக ஏற்பட்ட சேவைத் தோல்வியால் சிரமத்துக்குள்ளான வாடிக்கையாளர்களுக்கு இழப்பீடு வழங்கத் தொடங்கியுள்ளதாக Optus Communications...

ஓய்வூதிய பலன் தாமதங்கள் குறித்த செனட் விசாரணை

ஓய்வூதிய பலன்களைப் பெறுவதில் ஏற்பட்ட தாமதம் குறித்து விசாரணை நடத்த செனட் நகர்ந்துள்ளது. குறிப்பாக பழைய கருணைத் தொகை மற்றும் காப்பீட்டுத் தொகையை செலுத்தாதது தொடர்பான புகார்களின்...

9/10 ஆஸ்திரேலியர்கள் பூர்வீக பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டும் என கூறுகிறார்கள்

பழங்குடியின மக்கள் வாக்கெடுப்பு தோல்வியடைந்தாலும், பழங்குடியின மக்களின் பிரச்சனைகளுக்கு உடனடியாக தீர்வு காணப்பட வேண்டும் என பெரும்பான்மையான ஆஸ்திரேலியர்கள் நம்புவதாக புதிய கணக்கெடுப்பு ஒன்றில் தெரியவந்துள்ளது. 10...

ஆஸ்திரேலியா முழுவதும் நாஜி சல்யூட்களை கிரிமினல் குற்றமாக மாற்ற ஏற்பாடுகள்

நாட்டில் யூத எதிர்ப்பு மற்றும் இனவெறி அதிகரித்து வருவதால், நாஜி வணக்கத்தை குற்றமாக்குவதில் மத்திய அரசு கவனம் செலுத்தியுள்ளது. நாஜி நெறிமுறைகளை நாடு முழுவதும் அமல்படுத்துவது எதிர்காலத்தில்...

ஆஸ்திரேலியா முழுவதும் நாஜி சல்யூட்களை கிரிமினல் குற்றமாக மாற்ற ஏற்பாடுகள்

நாட்டில் யூத எதிர்ப்பு மற்றும் இனவெறி அதிகரித்து வருவதால், நாஜி வணக்கத்தை குற்றமாக்குவதில் மத்திய அரசு கவனம் செலுத்தியுள்ளது. நாஜி நெறிமுறைகளை நாடு முழுவதும் அமல்படுத்துவது எதிர்காலத்தில்...

கடந்த 12 மாதங்களில் ஆஸ்திரேலியாவில் அதிக மற்றும் குறைந்த ஊதிய உயர்வு உள்ள துறைகள் இதோ!

கடந்த 12 மாதங்களில் அவுஸ்திரேலியாவில் அதிக மற்றும் குறைந்த சம்பள அதிகரிப்புகளை கொண்ட துறைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. சமூக சேவைகள் மற்றும் அபிவிருத்தி தொடர்பான வேலைகளில் சம்பளம் 08...