ஆஸ்திரேலியாவின் கிழக்குப் பகுதியில் எரிசக்தி நெருக்கடி ஏற்பட்டுள்ளது. விக்டோரியா (Victoria), நியூ செளத் வேல்ஸ் (New South Wales), குவீன்ஸ்லந்து ஆகிய மாநிலங்களில் அடுத்த 24 மணிநேரத்தில் எரிவாயு, மின்சாரப் பற்றாக்குறை ஏற்படக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
குளிர்பருவ நிலையால் அங்கு எரிசக்தி விநியோகம் தடைப்பட்டிருக்கிறது. ஒட்டுமொத்த மின்சார விலைகள் இவ்வாண்டில் மட்டுமே இரட்டிப்பாகியிருக்கின்றன.
அவற்றின் விலைகள், 50 மடங்கு அதிகரிக்கலாம் என்று முன்னுரைக்கப்படுகிறது. ஆஸ்திரேலியாவின் எரிவாயுவில் 70 விழுக்காடு வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டாலும் எரிவாயு விலையேற்றத்தால் மின்சாரக் கட்டணங்கள் அதிகரித்துள்ளன.
கடந்த 50 ஆண்டுகளில் ஏற்பட்டுள்ள ஆக மோசமான எரிசக்தி நெருக்கடியாக அது கருதப்படுகிறது.
ஆஸ்திரேலியாவின் புதிய அரசாங்கம், நெருக்கடியைக் கையாளவேண்டும் என்று உற்பத்தியாளர்களும் பயனீட்டாளர் குழுக்களும் வலியுறுத்தியுள்ளன.