News போரினால் சீரழியும் உக்ரைன் - நைட்ரிக் அமில தாங்கியை தாக்கிய ரஷ்யா...

போரினால் சீரழியும் உக்ரைன் – நைட்ரிக் அமில தாங்கியை தாக்கிய ரஷ்யா – ஆபத்தில் மக்கள்

-

உக்ரைனின் செவெரோடோனெட்ஸ்க் நகரில் நைட்ரிக் அமிலம் கொண்ட டாங்கரை குறிவைத்து ரஷ்யா தாக்குதல் நடத்தியதாக அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன.

உக்ரைனின் லுஹான்ஸ்க் பகுதியில் உள்ள செவெரோடோனெட்ஸ்க் நகரில் ரசாயன ஆலையில் நைட்ரிக் அமில டாங்கரை ரஷ்யா தாக்கியது என்று உள்ளூர் கவர்னர் செர்ஜி கெய்டே கூறினார்.

இதனால் ஏற்படும் பாதிப்புகளை தவிர்க்க, மக்கள் தங்குமிடங்களை விட்டு வெளியே வரவேண்டாம் என்று கவர்னர் வலியுறுத்தினார்.

நைட்ரிக் அமிலம் சருமத்தில் பட்டாலும் சரி, சுவாசித்தாலும், உடலுக்குள் சென்றாலும் மிகவும் ஆபத்தை விளைவிக்கும்

ரஷ்யப் படைகளின் வான்வழித் தாக்குதலினால் ரசாயன ஆலையில் இருந்த நைட்ரிக் அமில டாங்கர் தாக்கப்பட்டது என்று ஆளுநர் செர்ஜி கெய்டே வெளியிட்ட சமூக ஊடக செய்தியில் தெரிவித்தார்.

செவரோடோனெட்ஸ்க் நகரில் ரஷ்ய மற்றும் உக்ரேனியப் படைகளுக்கு இடையே கடுமையான சண்டை நடபெற்றது.

“சோடா கரைசலில் செறிவூட்டப்பட்ட பாதுகாப்பு கவசங்களை தயாரித்து வைத்துக் கொள்வது நல்லது என்று அந்நகர கவர்னர் மக்களுக்கு அறிவுறுத்தினார்.

செவரோடோனெட்ஸ்கில் உள்ள இரசாயன ஆலையில் ரஷ்யா நடத்திய வான்வழித் தாக்குதல் பைத்தியக்காரத்தனமானது, மனிதாபிமானம் அற்றது என்று உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி கூறினார்.

ரஷ்ய இராணுவம், ரஷ்ய தளபதிகள் மற்றும் ரஷ்யாவின் வீரர்களும் பைத்தியங்கள் இல்லை என்று சொல்வதுதான் ஆச்சரியம் இல்லாதது என்று சமூக ஊடகமான டெலிகிராமில் நேற்று (2022, மே 31) பேசிய ஜெலென்ஸ்கி தெரிவித்தார்.

உக்ரைனின் படைகளில் கட்டுப்பாட்டிற்குள் இருந்த பகுதியில் நைட்ரிக் அமிலம் இருந்த டேங்கர் “வெடித்தது” என்று மாஸ்கோ ஆதரவு பிரிவினைவாதிகளை மேற்கோள் காட்டி AFP செய்தி வெளியிட்டுள்ளது.

“Azot இரசாயன ஆலையில், இரசாயனங்கள் கொண்ட ஒரு கொள்கலன் வெடித்தது. முதற்கட்டமாக, அந்த டேங்கரில் இருந்தது நைட்ரிக் அமிலம்,” என்று தெரியவதுள்ளது என லுகான்ஸ்க் மக்கள் குடியரசின் பிரதிநிதி ரோடியன் மிரோன்சிக், டெலிகிராம் செயலியில் தெரிவித்தார்.

Latest news

அர்ஜெண்டினாவில் நிலநடுக்கம்

தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான அர்ஜெண்டினாவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. குறித்த நிலநடுக்கம் அந்நாட்டின் வடமேற்குப் பகுதியில் சான் அண்டோனியோ...

சிரியாவில் சர்வதேச விமான நிலையம் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல்

சிரியாவில் ஈரான் ஆதரவு பெற்ற பயங்கரவாத குழுக்கள் இருப்பதாக கூறி அந்த நாட்டின் மீது இஸ்ரேல் தொடர்ந்து, வான்தாக்குதல் நடத்தி வருகின்றது.

டான்டினோங் உள்ளிட்ட பல பகுதிகளுக்கு புயல் அபாயம்

மெல்போர்ன் நகரின் பல இடங்களில் இன்று புயல் தாக்கும் அபாயம் உள்ளதாக வானிலை மையம் எச்சரித்துள்ளது. டான்டினோங்-ஜீலாங்-மெல்போர்ன் பெருநகரப்...

தெற்கு ஆஸ்திரேலியா முதியோர் பராமரிப்பு தொலைதூர பராமரிப்பை விரிவுபடுத்த நடவடிக்கை

தெற்கு ஆஸ்திரேலிய மாநில அரசாங்கம் வயதான பராமரிப்பு குடியிருப்பாளர்களுக்கு தொலைதூர சிகிச்சை (மெய்நிகர் பராமரிப்பு) வழங்கும் திட்டத்தை விரிவுபடுத்த முடிவு செய்துள்ளது.

டான்டினோங் உள்ளிட்ட பல பகுதிகளுக்கு புயல் அபாயம்

மெல்போர்ன் நகரின் பல இடங்களில் இன்று புயல் தாக்கும் அபாயம் உள்ளதாக வானிலை மையம் எச்சரித்துள்ளது. டான்டினோங்-ஜீலாங்-மெல்போர்ன் பெருநகரப்...

தெற்கு ஆஸ்திரேலியா முதியோர் பராமரிப்பு தொலைதூர பராமரிப்பை விரிவுபடுத்த நடவடிக்கை

தெற்கு ஆஸ்திரேலிய மாநில அரசாங்கம் வயதான பராமரிப்பு குடியிருப்பாளர்களுக்கு தொலைதூர சிகிச்சை (மெய்நிகர் பராமரிப்பு) வழங்கும் திட்டத்தை விரிவுபடுத்த முடிவு செய்துள்ளது.