திருமணம் செய்ய மணமகனுக்கு 10 கட்டளைகளை பட்டியலிட்ட இளம்பெண்

0
569

இந்தியாவில் திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை அருகே சொக்கலிங்கபுரத்தைச் சேர்ந்த பொன்ராஜ் என்பவருக்கும், கரைசுத்துபுதூரை சுவாதி அனுஷியாவுக்கும் திருமணம் நடைபெற்றது. சொக்கலிங்கபுரத்தில் நடைபெற்ற இவர்களின் திருமண வரவேற்பு விழாவில் மணமக்களின் நண்பர்கள் அனுசுயாவின் 10 கட்டளைகள் எனும் தலைப்பில் கட் அவுட் வைத்திருந்தனர்.

மணமகள் மணமகனுக்கு கட்டளை இடுவதாக அவர்கள் அச்சடித்து வைத்த வசனங்கள் இணையத்தில் கவனம் பெற்று வருகிறது.

அதில், 1. உன்னுடைய மனைவி நான் இருக்கிறேன். மற்றொரு காதலி உனக்கு இருக்க கூடாது.

  1. அடுத்தவரின் மனைவியை பார்த்து சிரிக்க கூடாது. அவளுடைய அழகை வர்ணிக்க கூடாது.
  2. இரவு 8:30 மணிக்கு சமையல் அறை மூடப்படும்.
  3. இரவு 9:30 மணிக்கு படுக்கையறை மூடப்படும்.
  4. தேங்காய் எண்ணெய், சோப்பு, ஷாம்பு, துண்டு எடுத்துக்கொண்டு போய் குளிக்க வேண்டும். தொந்தரவு செய்யக்கூடாது.
  5. ஹோட்டல் சாப்பாட்டை நிறுத்தி பழைய சாப்பாடு என்றாலும் வீட்டில் சாப்பிட வேண்டும்.
  6. மது அருந்தினால் வீட்டிற்கு வெளியே படுத்துக்கொள்ள வேண்டும்.
  7. மாலை 6:30 முதல் 9:30 மணி வரை டிவி பார்க்கும் நேரம். அந்த நேரத்தில் கூப்பிட்டு தொந்தரவு செய்ய கூடாது. தண்ணீர் கூட கிடையாது.
  8. உறக்கத்தில் சத்தம் போடவோ, குறட்டை விடவோ கூடாது.
  9. மாமியாரின் செயல்பாடுகளுக்கு எவ்வித தயவு தாட்சண்யம் பார்க்காமல் பதிலடி கொடுக்கப்படும்.
Previous articleதமிழ் மொழியிலான குடிவரவுத் தகவல் வழங்கல் நிகழ்வு
Next articleமாப்பிள்ளை வேண்டாம்…தன்னை தானே திருமணம் செய்வதாக அறிவித்த இளம்பெண்