இந்தியாவின் உத்திரபிரதேசம் மாநிலத்தில் அரசு ஊழியராக இருந்த ரிங்கு சிங் ரஹீ, தன்னுடைய பணிக்காலத்தில் உதவித் தொகையில் நடைபெற்ற ஊழல் ஒன்றை கண்டுபிடித்துள்ளார். 83 கோடி ரூபாய் ஊழல் தொடர்பான தகவலை வெளிப்படுத்தி இருந்தார். இதனால் சில அதிகாரிகள் அவர் மீது கடும் கோபத்தில் இருந்துள்ளனர். இந்நிலையில் 2009 ம் ஆண்டு ரிங்கு சிங்கை சிலர் துப்பாக்கியால் சுட்டனர்.
இந்த தாக்குதலில் உடலில் 7 துப்பாக்கி தோட்டாக்கள் பாய்ந்த நிலையிலும் ரிங்கு சிங் உயிர் தப்பினார். இதில் 3 தோட்டத்தில் அவரின் முகத்தில் பாய்ந்திருந்ததாக கூறப்படுகிறது. இந்த தாக்குதலில் ரிங்கு சிங் ஒரு புறம் கண்பார்வையையும் இழந்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக 8 பேர் கைது செய்யப்பட்டு, அவர்களுக்கு தண்டனையும் வழங்கப்பட்டுள்ளது.
நான்கு மாத தொடர் சிகிச்சைக்கு பிறகு மீண்டு வந்த ரிங்கு சிங், யுபிஎஸ்சி எனப்படும் மத்திய அரசு பணயாளர் தேர்வாணய தேர்வுகளுக்கு பயிற்சி கொடுக்கு நிறுவனத்தில் இணைந்து பயிற்சி கொடுக்க ஆரம்பித்தார். தொடர்ந்து பல மாணவர்களை தேர்வுக்கு செய்து அனுப்பிய ரிங்கு சிங்கிடம் நீங்களே இந்த தேர்வை எழுதலாமே என மாணவர்கள் சிலர் அறிவுறுத்தி உள்ளனர். 40 வயதாகும் ரிங்கு சிங்கிற்கு தேர்வு எழுத இருந்த சில தளர்வுகளை பயன்படுத்தி 2021 ம் ஆண்டு தேர்வு எழுதி உள்ளார்.
இந்த தேர்வில் இந்திய அளவில் 683வது இடத்தை பிடித்து தேர்ச்சி பெற்றுள்ளார். நேர்மையான அரசு ஊழியராக இருந்து பல துன்பங்களை தாண்டி, கடினமான யுபிஎஸ்சி தேர்வுகளை எழுதி தேர்ச்சி பெற்றுள்ள ரிங்கு சிங்கிற்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.