ஷாருக்கான், கத்ரீனா கைப் உள்ளிட்ட 55 பிரபலங்களுக்கு கொரோனா பாதிப்பு

0
425

பாலிவுட்டின் பிரபல நடிகரான ஷாருக்கான மற்றும் நடிகை கத்ரீனா கைப் ஆகியோருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. நடிகர் ஷாருக்கான் தற்போது பதான், ஜவான் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்கள். இந்த சமயத்தில் கடந்த சில நாட்களாக அவருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டு இருந்தது. இதனால் அவருக்கு கொரோனா தொற்று பரிசோதனை நடத்தப்பட்டது. இதில் அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதற்கிடையே திரைப்பட தயாரிப்பாளரின் பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்ட இந்தி திரையுலகை சேர்ந்த பிரபல நடிகர், நடிகைகள் என 55 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பிரபல தயாரிப்பாளரான கரன் ஜோகரின் 50 வது பிறந்தநாளை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விருந்தில் தான் ஷாருக்கான், கத்ரீனா கைப், கியாரா அத்வானி, ஜான்வி கபூர், கரீனா கபூர் கான் உள்ளிட்ட நட்சத்திரங்கள் கலந்து கொண்டனர்.

இந்தி திரையுலகை சேர்ந்த பிரபலங்கள் பலருக்கும் ஒரே சமயத்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவிலும் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் திரைப்பட ஸ்டூடியோக்களில் கூட்டமாக இருப்பது, அதிக நபர்களுக்கான விருந்துகளை ஏற்பாடு செய்ய வேண்டாம் என பிரஹன்மும்பை நகராட்சி நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது.

Previous articleஆஸ்திரேலியாவில் தொடர்ந்து 3வது நாளாக குரங்கு அம்மை பாதிப்பு கண்டுபிடிப்பு
Next articleதேவார பாடலை கேட்டு கண்ணீர் விட்ட இந்திய பிரதமர் நரேந்திர மோடி