ஆஸ்திரேலியாவில் தொடர்ந்து 3வது நாளாக குரங்கு அம்மை பாதிப்பு கண்டுபிடிப்பு

0
506

ஆஸ்திரேலியாவின் நியூசவுத் வேல்ஸ் மாகாணத்தில் தொடர்ந்து மூன்றாவது நாளாக புதிய குரங்கு அம்மை பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. புதிதாக நான்காவது மற்றும் ஐந்தாவது நபருக்கு குரங்கு அம்பை பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

சமீபத்தில் ஐரோப்பாவிற்கு பயணம் மேற்கொண்ட இரண்டு ஆண்களுக்கு குரங்கு அம்மை உறுதி செய்யப்பட்டதை நியூசவுத் வேல்ஸ் சுகாதாரத்துறை உறுதி செய்துள்ளது. சிட்னிக்கு திரும்பிய பிறகு இவர்களுக்கு பல நாட்களாக லேசான உடல்நல பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மருத்துவரிடம் பரிசோதனை செய்த போது குரங்கு அம்மை நோய்க்கான அறிகுறிகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. உடனடியாக பரிசோதனை நடத்தப்பட்டு, குரங்கு அம்மை பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

விக்டோரியாவில் குரங்கு அம்மை பாதிப்பு கண்டறியப்பட்டதை தொடர்ந்து நியூசவுத் வேல்ஸ் மாகாணத்திலும் குரங்கு அம்மை பரவல் அதிகரித்துள்ளது. குரங்கு அம்மை கண்டறியப்பட்டவர்கள் வீட்டு தனிமையில் வைக்கப்பட்டுள்ளனர்.

Previous articleஇந்தோனேசியப் பயணம் தொடர்பில் ஆஸ்திரேலியப் பிரதமர் வெளியிட்ட முக்கிய தகவல்!
Next articleஷாருக்கான், கத்ரீனா கைப் உள்ளிட்ட 55 பிரபலங்களுக்கு கொரோனா பாதிப்பு