தேவார பாடலை கேட்டு கண்ணீர் விட்ட இந்திய பிரதமர் நரேந்திர மோடி

0
284

இந்தியாவின் தமிழகத்தில் மதுரை நகரில் விஸ்வ இந்து பரிஷத் அறவழி காட்டும் ஆன்றோர் பேரவை சார்பில் இரண்டு நாள் துறவியர் மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் மதுரை ஆதீனம் ஹரிகர தேசிக ஞானசம்பந்த பரமாச்சார்ய சுவாமி பேசுகையில், மதவாதம் பற்றி பலர் பேசுகிறார்கள். அதை பற்றி கேட்டால் என்னை சங்கி என்கிறார்கள். நான் சங்கியும் இல்லை, மங்கியும் இல்லை. சமயத்திற்காக பாடுபடுகிறேன்.

வெளிநாடுகளுக்கு கடத்தப்பட்ட பல சிலைகளை பிரதமராக வந்த பிறகு நரேந்திர மோடி மீட்டுள்ளார். அவரிடம் தேவாரம் பாடிக் காண்பித்தேன். இதைக் கேட்ட பிரதமர் கண்ணீர் விட்டார். நாட்டிற்கு நல்ல பிரதமர் கிடைத்துள்ளார். இந்து கடவுள்களை பலர் விமர்சிக்கிறார்கள். மாற்று சமயம் பற்றி சினிமாவில் ஒரு காட்சி வந்தால், அதற்கு எதிராக உடனே எதிர்வினையாற்றுகிறார்கள். கோயில் நிலங்களை மீட்க வேண்டும் என்றார்.

தேவார பாடலை கேட்டு பிரதமர் நரேந்திர மோடி கண் கலங்கினார் என்ற யாருக்கும் தெரியாத தகவலை மதுரை ஆதீனம் மாநாட்டு உரையில் பகிர்ந்திருப்பது பலருக்கும் ஆச்சரியத்தை தந்துள்ளது. தேவாரம், திருவாசகம் போன்ற சமய நூல்களை பாதுகாப்பது எவ்வளவு முக்கியம் என்பது பற்றியும் அவர் வழியுறுத்தினார்.