நடிகர் சல்மான் கானுக்கு கொலை மிரட்டல்

0
331

பிரபல இந்தி நடிகர் சல்மான் கான் மற்றும் அவரது தந்தைக்கு கொலை மிரட்டல் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. சல்மான் கானின் தந்தை சலீம் கான் காலையில் வழக்கமாக நடைபயிற்சி செய்து விட்டு ஓய்வு எடுக்கும் இடத்தில் இருந்து இந்த கடிதம் கைப்பற்றப்பட்டுள்ளது. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அந்த கடிதத்தில், சல்மான் கானை ஜோத்பூரில் வைத்து கொலை செய்வோம். அப்போது தெரியும் நாங்கள் யார் என்பது என குறிப்பிடப்பட்டுள்ளது. மான் வேட்டை ஆடிய வழக்கில் நடிகர் சல்மான் கான், ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் உள்ள நீதிமன்றத்தில் விரைவில் விசாரணைக்காக வர உள்ளார். அந்த சமயத்தில் சல்மான் கானை கொலை செய்ய திட்டமிட்டுள்ளதாக கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பாடகர் சித்து மோசே வாலா மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் நடந்து சில நாட்களே ஆகும் நிலையில் தற்போது சல்மான் கானிற்கும் மிரட்டல் வந்துள்ளது அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. சமீப நாட்களாக சல்மான் கானிற்கு தொலைப்பேசியிலும், கடிதத்திலும் கொலை மிரட்டல் விடுக்கப்படுவது அதிகரித்து வருகிறது.

Previous articleதேவார பாடலை கேட்டு கண்ணீர் விட்ட இந்திய பிரதமர் நரேந்திர மோடி
Next articleதமிழகத்தில் புதிதாக 2 வகை வைரஸ் பாதிப்பு…12 பேர் பாதிப்பு