News இந்தோனேசியப் பயணம் தொடர்பில் ஆஸ்திரேலியப் பிரதமர் வெளியிட்ட முக்கிய தகவல்!

இந்தோனேசியப் பயணம் தொடர்பில் ஆஸ்திரேலியப் பிரதமர் வெளியிட்ட முக்கிய தகவல்!

-

ஆஸ்திரேலியப் பிரதமர் ஆன்டனி ஆல்பனீசி (Anthony Albanese), தமது இந்தோனேசியப் பயணம் இருதரப்பு உறவின் முக்கியத்துவத்தைக் காட்டுவதாகக் கூறியிருக்கிறார்.

புதிய பிரதமராகப் பதவியேற்ற 2 வாரங்களுக்குப் பிறகு அவர் இந்தோனேசியாவுக்குப் பயணம் மேற்கொள்கிறார்.

தென்கிழக்காசியாவில் தமது அரசாங்கம் அதிக கவனம் செலுத்தவிருப்பதாகத் திரு. ஆல்பனீசி தெரிவித்தார்.

ஆஸ்திரேலியப் பிரதமர் ஜக்கர்த்தாவில் இந்தோனேசிய அதிபர் ஜோக்கோ விடோடோவுடன் (Joko Widodo) பேச்சுவார்த்தையில் ஈடுபடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

திரு. ஆல்பனீசி, ஆஸ்திரேலிய வெளியுறவு அமைச்சர் Penny Wong, வர்த்தக அமைச்சர் Don Farrell ஆகியோர் இந்தோனேசியாவுக்குச் செல்கின்றனர்.

ஆஸ்திரேலியாவின் தொழிற்கட்சி, ஆட்சியைக் கைப்பற்றியதைத் தொடர்ந்து, திரு. ஆல்பனீசி மேற்கொள்ளும் இரண்டாவது பயணம் இது.

கடந்த மாதம் Quad நாடுகளுக்கு இடையே நடந்த சந்திப்பில் கலந்துகொள்ள அவர் தோக்கியோ சென்றிருந்தார்.

Latest news

ஆஸ்திரேலியாவில் உள்ள McDonald’s உணவகங்களில் கவுண்டர்களுக்கு முன்னால் ஒரு பிளாஸ்டிக் கவர்

அவுஸ்திரேலியாவில், துரித உணவு உணவக சங்கிலி அதன் உணவகங்களின் கவுன்டர்களுக்கு முன்னால் பிளாஸ்டிக் கவரைப் பயன்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளது.

குயின்ஸ்லாந்து பொது போக்குவரத்து சேவைகளில் பெரிய மாற்றம்

குயின்ஸ்லாந்து மாநிலத்தில் பயணிகள் போக்குவரத்து பேருந்து சேவைகளுக்கான கட்டண முறையை எளிமையாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன்படி, எதிர்காலத்தில் ஸ்மார்ட்போன்,...

பல தசாப்தங்களுக்குப் பிறகு, ரிசர்வ் வங்கிக்கு இன்று திருத்த அறிக்கை

ஆஸ்திரேலியாவின் பெடரல் ரிசர்வ் வங்கியில் அறிமுகப்படுத்தப்பட உள்ள சீர்திருத்தங்கள் அடங்கிய அறிக்கையை மத்திய கருவூல அமைச்சர் ஜிம் சால்மர்ஸ் இன்று பெற உள்ளார்.

கன்பரா விமான நிலையத்தில் துப்பாக்கிச் சூடு நடத்திய நபருக்கு 3 வருட சிறைத்தண்டனை

கடந்த ஆகஸ்ட் மாதம் கன்பரா விமான நிலையத்தில் துப்பாக்கிச் சூடு நடத்திய சந்தேகநபருக்கு 3 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.