விக்ரம் படத்திற்காக சூர்யா வாங்கிய சம்பளம்

0
261

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ஜூன் 03-ஆம் தேதி வெளியாகி இருக்கும் திரைப்படம் ‘விக்ரம்’. ‘விக்ரம்’ படத்தில் ரோலக்ஸ் கேரக்டரில் நடிக்க சூர்யா வாங்கிய சம்பளம் எவ்வளவு என்பது குறித்து தகவல் வெளியாகி உள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ஜூன் 03-ஆம் தேதி வெளியாகி இருக்கும் திரைப்படம் ‘விக்ரம்’. கமல்ஹாசன் கதாநாயகனாக நடித்திருக்கும் இப்படத்தில் விஜய் சேதுபதி, பகத் பாசில், நரேன், அர்ஜுன் தாஸ், காளிதாஸ் ஜெயராம் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இதில் சூர்யா கவுரவ வேடத்தில் நடித்துள்ளார்.

இப்படத்தை கமல்ஹாசன் தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் மூலம் தயாரிக்கிறார். அனிருத் இசையமைக்கும் இப்படத்திற்கு கிரிஷ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்துள்ளார். பெரிய எதிர்பார்ப்புகளிடையே திரையரங்குகளில் வெளியான ‘விக்ரம்’ திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதனிடையே, ரோலேக்ஸ் கதாபாத்திரத்தில் நடித்த சூர்யாவின் கதாபாத்திரம் மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

இந்நிலையில், கமலின் ‘விக்ரம்’ படத்தில் ரோலக்ஸ் கேரக்டரில் நடிக்க சூர்யா வாங்கிய சம்பளம் எவ்வளவு என்பது குறித்து தகவல் வெளியாகி உள்ளது. இப்படத்தில் ஐந்து நிமிடங்களே வரும் காட்சியில் நடிப்பதற்காக ஒரு நாள் செலவழித்த சூர்யா எந்தவித சம்பளமும் வாங்கவில்லை என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.

Previous articleஉதவுவதை போல் நடித்து ஏமாற்றினார்…தனக்கு நடந்த பாலியல் கொடுமைகளை புத்தகமாக வெளியிட்ட நடிகை
Next articleபிரிஸ்பேனில் இசை மழை பொழிய வரும் புண்யா செல்வா…யார் இவர் ?