பிரிஸ்பேனில் இசை மழை பொழிய வரும் புண்யா செல்வா…யார் இவர் ?

0
569

ஆகஸ்ட் 28 ம் தேதி பிரிஸ்பேனில் நடக்க உள்ள இன்னிசை மாலை 2022 நிகழ்ச்சியில் பங்கேற்று இசை மழை பொழிய போகிறார் புண்யா செல்வா. இவர் யார் என்பதை பற்றி இங்கே பார்க்கலாம்.

இந்தியாவின் தமிழகத்தை சேர்ந்த பின்னணி பாடகி, மேடை பாடகி தான் இந்த புண்யா செல்வா. புண்யா என பெயர் சொன்னாலே தெரியும் அளவிற்கு இவர் தற்போது பிரபலமாகி விட்டார். விஜய் டிவியில் நடத்தப்பட்ட சூப்பர் சிங்கர் சீசன் 7 ல் போட்டியாளராக கலந்து கொண்டு, தனது குரல் வளத்தால் இசை ரசிகர்கள் மனதில் அழுத்தமான இடத்தை பிடித்தவர் தான் இந்த புண்யா.

சென்னையில் வசித்து வரும் பெண்ணான புண்யாவிற்கு சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் வெற்றி பெற்ற பிறகு சினிமாக்களில் பின்னணி பாடும் வாய்ப்பு கிடைத்தது. தமிழகத்தின் நெய்வேலியில் பிறந்திருந்தாலும் இவர் வளர்ந்தது, படித்ததும் அனைத்தும் லண்டனில் உள்ள Edgware நகரில் தான். டாக்டரான இவர், இசை மீது கொண்ட தீராத காதலில் கடல் கடந்து இந்தியா வந்தார். சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக தான் பார்த்துக் கொண்டிருந்த டாக்டர் பணியை ராஜினாமா செய்து விட்டு, பாடகி ஆனவர்.

புண்யா, பக்ரித் என்ற படத்தின் மூலம் திரையுலக பாடகியாக அறிமுகமானார். இவரது குரல் வளம் அனைவரையும் ஆச்சரியப்பட வைத்தது. வேலைக்காரன் படத்தில் வரும் உயிரே பாடலை பாடி தான் இசை ரசிகர்களிடம் புண்யா அறிமுகம் ஆனார்.