News ரஷ்யா உக்ரேனிடமிருந்து தானியங்களைத் திருடி விற்றுவருவதனை உறுதி செய்த அமெரிக்கா

ரஷ்யா உக்ரேனிடமிருந்து தானியங்களைத் திருடி விற்றுவருவதனை உறுதி செய்த அமெரிக்கா

-

ரஷ்யா உக்ரேனிடமிருந்து தானியங்களைத் திருடி தனது சொந்த லாபத்துக்காக விற்றுவருவதாகக் கூறும் அறிக்கைகளில் உண்மை இருப்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

ரஷ்யா ஏற்கனவே உக்ரேனின் சோள ஏற்றுமதிக்குத் தடைவிதித்துள்ளது. உலகில் உணவுப் பாதுகாப்பு குறித்த அக்கறைகள் அதிகரித்துவரும் நிலையில் இந்தத் தகவல் வெளியாகியுள்ளது.

அறிக்கைகள் நம்பகமானவை என அமெரிக்கா தெரிவித்துள்ளது. கருங்கடலில் இடம்பெறும் வணிகத்துக்கு இடையூறான செயல்களில் ஈடுபடுவது ஒருவகை மிரட்டல் என்று அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆன்டனி பிளிங்கன் வருணித்துள்ளார்.

உக்ரேன்-ரஷ்யப் போர் உலகின் உணவுப் பாதுகாப்பில் பெருத்த தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

ரஷ்யக் கட்டுப்பாட்டில் உள்ள துறைமுகங்களிலிருந்து வெளியேறும் சரக்குக் கப்பல்களில் திருட்டு தானியங்கள் இருப்பதாக நியூயார்க் டைம்ஸ் நாளிதழ் குறிப்பிட்டது.

அறிக்கைகளின் தொடர்பில் நடவடிக்கை எடுக்கும் முயற்சியாக அமெரிக்கா 14 நாடுகளிடம் எச்சரிக்கை விடுத்துள்ளதாகக் கூறப்பட்டது.

கிரெம்ளின் உக்ரேனில் விளைந்த 20 மில்லியன் டன் தானியங்களைத் தடுத்துவைத்திருப்பதாகத் பிளிங்கன் கூறினார்.

Latest news

அர்ஜெண்டினாவில் நிலநடுக்கம்

தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான அர்ஜெண்டினாவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. குறித்த நிலநடுக்கம் அந்நாட்டின் வடமேற்குப் பகுதியில் சான் அண்டோனியோ...

சிரியாவில் சர்வதேச விமான நிலையம் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல்

சிரியாவில் ஈரான் ஆதரவு பெற்ற பயங்கரவாத குழுக்கள் இருப்பதாக கூறி அந்த நாட்டின் மீது இஸ்ரேல் தொடர்ந்து, வான்தாக்குதல் நடத்தி வருகின்றது.

டான்டினோங் உள்ளிட்ட பல பகுதிகளுக்கு புயல் அபாயம்

மெல்போர்ன் நகரின் பல இடங்களில் இன்று புயல் தாக்கும் அபாயம் உள்ளதாக வானிலை மையம் எச்சரித்துள்ளது. டான்டினோங்-ஜீலாங்-மெல்போர்ன் பெருநகரப்...

தெற்கு ஆஸ்திரேலியா முதியோர் பராமரிப்பு தொலைதூர பராமரிப்பை விரிவுபடுத்த நடவடிக்கை

தெற்கு ஆஸ்திரேலிய மாநில அரசாங்கம் வயதான பராமரிப்பு குடியிருப்பாளர்களுக்கு தொலைதூர சிகிச்சை (மெய்நிகர் பராமரிப்பு) வழங்கும் திட்டத்தை விரிவுபடுத்த முடிவு செய்துள்ளது.