இந்தியாவில் தற்கொலைப்படை தாக்குதல்…அல்கொய்தா அமைப்பு மிரட்டல்

0
296

இந்தியாவின் டெல்லி, குஜராத் மும்பை ஆகிய இடங்களில் தற்கொலைப்படை தாக்குதல் நடத்துவோம் என அல் கொய்தா பயங்கரவாத இயக்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஞானவாபி விவகாரம் பற்றிய தொலைக்காட்சி விவாதத்தில், பங்கேற்று பேசிய பாஜக செய்தித்தொடர்பாளர் நுபுர் சர்மா இஸ்லாம் மதம் குறித்தும் முகமது நபிகள் குறித்தும் சர்ச்சைக்குரிய வகையில் பேசினார். அவரது பேச்சு மிகப் பெரிய பதற்றத்தை ஏற்படுத்தியது. இந்தியாவுக்கு இஸ்லாமிய நாடுகள் தரப்பில் இருந்து கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

இதனிடையே, நுபுர் சர்மா பாஜக கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டார். அவருக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதை தொடர்ந்து போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் கத்தார் நாடு கடுமையாக நடந்துகொள்வதாக கூறி ட்விட்டரி இந்தியர்கள் பலரும் கத்தார் நாடுக்கு எதிராக ‘Boycott Qatar’ என பதிவிட்டு எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், நபிகள் நாயகம் குறித்து சர்ச்சை கருத்து விவகாரம் தொடர்பாக இந்தியாவின் முக்கிய நகரங்களில் தற்கொலைப்படை தாக்குதல் நடத்தப்படும் என அல்கொய்தா இயக்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்ந்து அவ்வியக்கம் சார்பில் அனுப்பப்பட்ட கடந்த 6ம் தேதியிட்ட கடிதத்தில்,சில நாட்களுக்கு முன்பு, இந்துத்துவாவின் பிரச்சாரகர்களும் கொடி ஏந்தியவர்களும் தொலைக்காட்சி விவாதத்தில் இஸ்லாம் குறித்தும் நபிகள் குறித்து அவதூராக பேசினர். இந்த அவமானத்திற்கு பதிலளிக்கும் விதமாக, உலகெங்கிலும் உள்ள இஸ்லாமியர்களின் மனம் பலிவாக்கும் உணர்வால் நிரம்பியுள்ளது.

நமது உடலிலும், நம் குழந்தைகளின் உடலிலும் வெடிகுண்டுகளை கட்டிக்கொண்டு, நமது நபியை இழிவுபடுத்தோர் அனைவரையும் கொல்ல வேண்டும். டெல்லி, மும்பை, உத்தரபிரதேசம், குஜராத் ஆகிய பகுதிகளில் நாங்கள் தற்கொலைப்படை தாக்குதல்களை நடத்துவோம். டெல்லி, மும்பை, உத்தரபிரதேசம், குஜராத்தை சேர்ந்த காவி பயங்கரவாதிகள் தங்கள் முடிவுக்காக காத்திருக்க வேண்டும்’ என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து இந்த இடங்களில் மத்திய புலனாய்வு அமைப்பு பாதுகாப்பை தீவிப்படுத்தியுள்ளது.

Previous articleதங்கம் கடத்தலில் கேரள முதல்வர் பினராயி விஜயன் குடும்பத்திற்கு தொடர்பு… ஸ்வப்னோ சுரேஷ் தகவல்
Next articleநயன்தாரா – விக்னேஷ் சிவன் திருமண வைபவங்கள் துவங்கின