தங்கம் கடத்தலில் கேரள முதல்வர் பினராயி விஜயன் குடும்பத்திற்கு தொடர்பு… ஸ்வப்னோ சுரேஷ் தகவல்

0
1361

கேரளா தங்கம் கடத்தல் சம்பவத்தில் முதல்வர் பினராயி விஜயன், அவரது குடும்பத்தினருக்கு தொடர்பு இருப்பதாக வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள ஸ்வப்னா சுரேஷ் தெரிவித்துள்ளார். இந்த வழக்கில் தொடர்புடையவர்களால் தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகவும் இதனால் தான் ரகசிய வாக்குமூலம் அளித்துள்ளதாகவும் ஸ்வப்னா தெரிவித்துள்ளார்.

கேரளாவில் இருந்து திருவனந்தபுரம் விமான நிலையம் வழியாக கடத்தப்படவிருந்த ரூ.14.82 கோடி மதிப்புள்ள தங்கத்தை, இரண்டாண்டுகளுக்கு முன்பு மத்திய சுங்கத்துறை போலீசார் பறிமுதல் செய்தனர். இந்த வழக்கில் கேரள முதலமைச்சர் பினராய் விஜயனின் முன்னாள் முதன்மைச் செயலாளர் சிவசங்கர், சரித்குமார், ஸ்வப்னா சுரேஷ் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.

இந்த வழக்கில் சமீபத்தில் ஸ்வப்னா சுரேஷ் ரகசிய வாக்குமூலம் அளித்துள்ளார். இது தொடர்பான தகவல் வெளியாகியுள்ளது. அதில், முதல்வர் பினராயி விஜயன், முன்னாள் முதன்மைச் செயலாளர் எம். சிவசங்கர்,மற்றும் இந்த வழக்கில் முதலமைச்சரின் மனைவி கமலா, மகள் வீணா, முதல்வரின் முன்னாள் தனிச் செயலாளர் சி.எம்.ரவீந்திரன், முன்னாள் அமைச்சர் கே.டி.ஜலீல், நளினி நெட்டோ ஆகியோருக்கு தங்கல் கடத்தல் வழக்கில் தொடர்பு உள்ளதாகவும் அவர்கள் எனென்ன செய்துள்ளனர் என்பது பற்றியும் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

மேலும், ’ 2016ல் முதல்வர் பினராயி விஜயன் துபாயில் சென்ற போது சிவசங்கர் என்னை முதன்முதலில் தொடர்பு கொண்டார். அப்போது நான் தூதரகத்தில் செயலாளராக இருந்தேன். முதல்வர் பை ஒன்றை மறந்து விட்டார். அதனை விரைவாக கொண்டு சென்று ஒப்படைக்குமாறும் சிவசங்கர் கேட்டுள்ளார். தூதரகத்தில் உள்ள முக்கிய அதிகாரி மூலம் அந்த பை ஒப்படைக்கப்பட்டது. அதில் கரன்சி இருந்தது. தூதரகத்தில் உள்ள ஸ்கேனிங் இயந்திரத்தில் பை ஸ்கேன் செய்யப்பட்டது. அது மூலம் அதில் இருந்தது கரன்சி என்பது தெரிய வந்தது. அதில் இருந்து தான் பல சம்பவங்களும் தொடங்கியது.

Previous articleஇந்தியாவில் ஒருநாள் கோவிட் பாதிப்பு 5000 க்கு மேல் அதிகரிப்பு
Next articleஇந்தியாவில் தற்கொலைப்படை தாக்குதல்…அல்கொய்தா அமைப்பு மிரட்டல்