இந்தியாவில் ஒருநாள் கோவிட் பாதிப்பு 5000 க்கு மேல் அதிகரிப்பு

0
71

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5000 ஐ தாண்டியது. இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட புள்ளி விவரத்தில் கூறப்பட்டுள்ளதாவது: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 5,233 பேருக்கு தொற்று உறுதியானது.

இதனால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,31,90,282 ஆனது. கடந்த 24 மணி நேரத்தில், 1,881 பேர் நலமடைந்ததால், வைரஸ் தொற்றில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 4,26,36,710 ஆனது. தற்போது 28,857 பேர் சிகிச்சையில் உள்ளனர். முந்தைய நாட்களுடன் ஒப்பிடுகையில் இது 40 சதீதம் அதிகரிப்பு.

கோவிட் காரணமாக 7 பேர் மரணமடைந்ததால், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5,24,715 ஆக உயர்ந்தது. இந்தியாவில் இதுவரை 194.43 கோடி டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டது. கடந்த 24 மணி நேரத்தில் 14,94,086 டோஸ் தடுப்பூசி போடப்பட்டது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.