சித்து மூசேவாலா கொலை :சதி திட்டம் தீட்டியது லாரன்ஸ் பிஷ்னோய்

0
214

பஞ்சாப் பாடகர் சித்து மூசேவாலா கொலை பின்னணியில் லாரன்ஸ் பிஷ்னோய் சதி செயலில் ஈடுபட்டதை டில்லி போலீசார் உறுதி செய்துள்ளனர்.
பஞ்சாபில் பிரபல பஞ்சாபி மொழி பாடகர் சித்து மூசேவாலா, மான்சா மாவட்டத்தில் சுட்டுக் கொல்லப்பட்டார். பிரபல நிழல் உலக தாதா லாரன்ஸ் பிஷ்னோய் மற்றும் வடஅமெரிக்க நாடான, கனடாவில் உள்ள கோல்டி பிரார் ஆகியோருக்கு இந்த படுகொலை சம்பவத்தில் தொடர்பிருக்கலாம் என போலீசார் தெரிவித்தனர்.

இந்தியாவில் பரபரப்பை ஏற்படுத்திய இந்த கொலை வழக்கை டில்லி சிறப்பு போலீஸ் கமிஷனர் தலைமையிலான போலீசார் விசாரித்து வந்தனர். இது குறித்து டில்லி சிறப்பு போலீஸ் கமிஷனர் அளித்த பேட்டியில், பாடகர் சித்து மூசேவாலா கொலைக்கான சதி திட்டம் தீட்டியது லாரன்ஸ் பிஷ்னோய் தான் என அறிவித்துள்ளார்.