சர்வதேச அளவில் பல உணவு வகைகளுக்கு தட்டுப்பாடு நிலவுகின்ற நிலையில் ஆஸ்திரேலியாவில் பெய்த கனமழை, வெள்ளம் காரணமாக கீரை, காய்கறிகள் விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக KFC நிறுவனம் பர்கரில் கீரைக்கு (lettuce) பதிலாக, முட்டைகோஸை பயன்படுத்தி வருகின்றது.
ஏற்கனவே ரஷ்யா உக்ரைன் பிரச்சனைக்கு மத்தியில் பல்வேறு உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவி வருகின்றது. பல மூலதன பொருட்களின் விலையானது மோசமான உச்சத்தினை எட்டியுள்ளது.
இதற்கிடையில் இயற்கை பேரிடர் காரணமாக உற்பத்தியும் சில இடங்களில் பாதிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் தான் KFC உணவு சங்கிலி நிறுவனம் கீரைக்கு பதிலாக முட்டை கோஸினை பயன்படுத்த தொடங்கியுள்ளது. KFCயின் இந்த முடிவுக்கு அதிருப்தி தெரிவித்துள்ள ஆஸ்திரேலிய மக்கள், உணவின் சுவை குறைந்துவிட்டதாக கருத்து தெரிவித்துள்ளனர்.
கேஎஃப்சி உணவகம் தங்கள் உணவுப் பொருட்களில் lettuce என்ற கீரைக்குப் பதிலாக, முட்டைக்கோஸ் கலவையை பயன்படுத்தியதே இப்புகார்களுக்குக் காரணமாகும். அங்கு உற்பத்தி சரிவினால் இந்த வகை கீரைகளின் விலை அதிகரித்துள்ளது. இதன் காரணமாக செலவினத்தை கட்டுக்குள் வைக்க, ஆஸ்திரேலியாவில் KFC உணவகங்கள் தங்களுடைய உணவுச் செய்முறையை மாற்றும் கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளன.
இதற்கிடையில் KFCயில் உணவு சாப்பிடலாமா வேண்டாமா என்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதற்கிடையில் சமூக வலைதளங்களில் lettuce கீரை விலை மூன்று மடங்கு அதிகரித்துள்ளது. இந்த நிலையில் தான் கே எஃப் சி இப்படி ஒரு முடிவினை எடுத்துள்ளது. நடப்பு ஆண்டில் உணவு பொருட்கள் விலை உச்சம் தொட்டுள்ளது இது முதல் முறையல்ல.
உக்ரைன் மீது ரஷ்யா படையெடுத்ததால் டீசல், உரம் ஆகியவற்றின் விலைகள் ஏற்றம் அடைந்தன. அதுவும் ‘lettuce’ கீரை விலை உயர்விற்கு ஒரு காரணம் என கூறப்படுகிறது. ஆஸ்திரேலியாவில் தற்போது ஆள்பற்றாக்குறையும் நிலவி வருகின்றது. கடந்த ஆண்டே ஓமிக்ரான் காரணமாக விலைவாசி அதிகரித்துள்ளது.
கே எஃப் சி மட்டும் அல்ல, மெக்டொனால்டும் பல்வேறு மூலதன பொருட்கள் பற்றாக்குறை காரணமாக பாதிக்கப்பட்டுள்ளது. நாட்டில் பணவீக்கமானது 20 ஆண்டுகளில் உச்சம் தொட்டுள்ள நிலையில், இது இன்னும் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆஸ்திரேலிய மத்திய வங்கி வட்டி விகிதத்தினையும் அதிகரித்துள்ளது. இது இன்னும் அதிகரிக்கலாம் என்ற நிலையே இருந்து வருகின்றது.