News எனது அரசியல் பயணம் தடைபடாது - பதவி விலகிய பசில்

எனது அரசியல் பயணம் தடைபடாது – பதவி விலகிய பசில்

-

” நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை துறந்தாலும், எனது அரசியல் பயணம் தடைபடாது. அது வகையில் தொடரும்.” – என்று ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பஸில் ராஜபக்ச அறிவித்தார்.

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையகத்தில் இன்று நடைபெற்ற விசேட ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு அறிவிப்பு விடுத்தார்.

” அரச நிர்வாக பணியிலிருந்து இன்றுடன் விலகுகின்றேன். தேசிய பட்டியல் எம்.பி. பதவியை துறக்கின்றேன். எனினும், எனது அரசியல் பயணம் தடைபடாது.

அமைச்சு பதவியை வகித்த காலத்தில் என்னால் முடிந்தவற்றை மக்களுக்காக செய்தேனன். எனினும், மக்கள் எதிர்பார்த்த அனைத்தையும் செய்ய முடியாமல்போனது. எனவும் பஸில் ராஜபக்ச குறிப்பிட்டார்.

அதேவேளை, எந்நேரத்திலும் தேர்தலை எதிர்கொள்வதற்கு, ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி தயாரெனவும், கட்சியை பலப்படுத்துவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் பஸில் ராஜபக்ச குறிப்பிட்டார்.

நாட்டு பொருளாதாரம் வீழ்ச்சியடைந்தமைக்கு தான் மட்டுமல்ல அனைவரும் பொறுப்பு கூற வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

Latest news

6 ஆண்டுகளாக ஊழியர்களுக்கு குறைவான ஊதியம் வழங்கியதற்காக UNSW க்கு எதிரான விசாரணை

ஃபேர்வொர்க் ஒம்புட்ஸ்மேன் அலுவலகம், நியூ சவுத் வேல்ஸ் பல்கலைக்கழகம் அல்லது யுஎன்எஸ்டபிள்யூ, ஊதியம் வழங்கப்படாத குற்றச்சாட்டுகளுக்கு எதிராக விசாரணையைத் தொடங்கியுள்ளது.

BREAKING: டேனியல் ஆண்ட்ரூஸ் விக்டோரியாவின் பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார்

விக்டோரியாவின் பிரதமர் பதவியை ராஜினாமா செய்ய டேனியல் ஆண்ட்ரூஸ் முடிவு செய்துள்ளார். இதன்படி, நாளை பிற்பகல் 05.00 மணி...

விக்டோரியர்கள் செலுத்த வேண்டிய மீதமுள்ள அபராதம் $850 மில்லியன்

விக்டோரியர்கள் செலுத்த வேண்டிய அபராதத் தொகை 850 மில்லியன் டாலர்கள் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இவற்றில் $353 மில்லியன் அதிவேகத்துடன்...

உலகிலேயே தூய்மையான காற்று இங்கு மட்டுமே கிடைக்கும்!

சுத்தமான காற்று, நல்ல குடிநீர், ஆரோக்கியமான உணவு மற்றும் வசிப்பதற்கு இருப்பிடம் ஆகியவைதான் மனிதனின் முதல் தேவைகள் ஆகும்.

உலகிலேயே தூய்மையான காற்று இங்கு மட்டுமே கிடைக்கும்!

சுத்தமான காற்று, நல்ல குடிநீர், ஆரோக்கியமான உணவு மற்றும் வசிப்பதற்கு இருப்பிடம் ஆகியவைதான் மனிதனின் முதல் தேவைகள் ஆகும்.

வகுப்பறைக்குள் அரசியலை கொண்டு வந்ததாக 2 விக்டோரியா பாடசாலைகளுக்கு எதிராக முறைப்பாடுகள்

சுதேசி குரல் வாக்கெடுப்பு தொடர்பில் வகுப்பறைகளுக்குள் அரசியலை கொண்டு வந்தமைக்காக விக்டோரியா மாநிலத்தில் உள்ள 02 பாடசாலைகளுக்கு எதிராக முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன.