ஜப்பான் ஈராண்டு நீடித்த COVID-19 எல்லைக் கட்டுப்பாடுகளுக்குப் பிறகு இன்றுமுதல் வெளிநாட்டு சுற்றுப்பயணிகளை வரவேற்கிறது.
எனினும் ஆஸ்திரேலியா, சிங்கப்பூர், அமெரிக்கா, பிரித்தானியா உள்ளிட்ட கொரோனா அபாயம் குறைவாக உள்ளதாய்க் கருதப்படும் சில நாடுகளிலிருந்து மட்டுமே சுற்றுப்பயணிகள் அனுமதிக்கப்படுவர்.
முதல் கட்டமாகப் பயண முகவர்கள் ஏற்பாடு செய்யும் பயணங்களில் வருவோர் மட்டும் அனுமதிக்கப்படுவர்.
மக்கள் கூட்டம் அதிகமுள்ள இடங்களைத் தவிர்க்கும் வகையில் பயணங்களைத் திட்டமிடுமாறு பயண முகவர்கள் கேட்டுக்கொள்ளப்பட்டனர்.
பயணிகள் தனியார் மருத்துவக் காப்புறுதியை வாங்குமாறு ஜப்பானிய அரசாங்கம் இந்த வாரம் அறிவித்திருந்தது.