News2 வருடங்களின் பின்னர் ஆஸ்திரேலிய நாட்டவர்களுக்கு அனுமதி வழங்கிய ஜப்பான்

2 வருடங்களின் பின்னர் ஆஸ்திரேலிய நாட்டவர்களுக்கு அனுமதி வழங்கிய ஜப்பான்

-

ஜப்பான் ஈராண்டு நீடித்த COVID-19 எல்லைக் கட்டுப்பாடுகளுக்குப் பிறகு இன்றுமுதல் வெளிநாட்டு சுற்றுப்பயணிகளை வரவேற்கிறது.

எனினும் ஆஸ்திரேலியா, சிங்கப்பூர், அமெரிக்கா, பிரித்தானியா உள்ளிட்ட கொரோனா அபாயம் குறைவாக உள்ளதாய்க் கருதப்படும் சில நாடுகளிலிருந்து மட்டுமே சுற்றுப்பயணிகள் அனுமதிக்கப்படுவர்.

முதல் கட்டமாகப் பயண முகவர்கள் ஏற்பாடு செய்யும் பயணங்களில் வருவோர் மட்டும் அனுமதிக்கப்படுவர்.

மக்கள் கூட்டம் அதிகமுள்ள இடங்களைத் தவிர்க்கும் வகையில் பயணங்களைத் திட்டமிடுமாறு பயண முகவர்கள் கேட்டுக்கொள்ளப்பட்டனர்.

பயணிகள் தனியார் மருத்துவக் காப்புறுதியை வாங்குமாறு ஜப்பானிய அரசாங்கம் இந்த வாரம் அறிவித்திருந்தது.

Latest news

செவ்வாய் கிரகத்தை போல் காட்சியளிக்கும் கிரேக்க நாடு

சஹாரா பாலைவனத்தில் இருந்து வரும் தூசி மேகங்களுடன், கிரீஸ் நாட்டின் ஏதென்ஸ் நகருக்கு மேலே செவ்வாய் கிரகத்தை போன்ற ஆரஞ்சு நிற புகை ஒன்று தோன்றியுள்ளதாக...

ஆஸ்திரேலியாவில் படிப்படியாக குறையும் மின் கட்டணம்

புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தி அதிகரித்துள்ள நிலையில், அவுஸ்திரேலியாவில் மின் கட்டணம் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 2024 ஆம் ஆண்டின் முதல் காலாண்டிற்கான ஆஸ்திரேலிய எரிசக்தி சந்தையின் சமீபத்திய அறிக்கை...

ஆஸ்திரேலியாவில் பேசப்படும் முதல் 5 மொழிகள் இதோ!

ஆங்கிலம் தவிர, ஆஸ்திரேலியாவில் அதிகம் பயன்படுத்தப்படும் மற்ற முதல் 5 வெளிநாட்டு மொழிகள் பெயரிடப்பட்டுள்ளன. அதன்படி, ஆங்கிலம் தவிர, ஆஸ்திரேலியர்களிடையே மாண்டரின் மிகவும் பொதுவான மொழியாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவில்...

வெளி நாடுகளில் பிறந்த ஆஸ்திரேலியர்கள் பற்றிய புதிய தகவல்

ஆஸ்திரேலியாவின் மக்கள் தொகையில் 30.7 சதவீதம் பேர் வெளிநாட்டில் பிறந்தவர்கள் என்று சமீபத்திய புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. மக்கள்தொகை மற்றும் புள்ளியியல் பணியகத்தின் தரவுகளின்படி, பெரும்பாலான ஆஸ்திரேலியர்கள் பிறந்த...